பாலியல் சீண்டல் புகார்; ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்' 

கல்வராயன்மலை; கல்வராயன்மலை பகுதியில் உள்ள அரசு உண்டு, உறைவிட பள்ளியில், மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில், மணியார்பாளையம் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலை பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தங்கி படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக பணிபுரியும் தனபால், மாணவியருக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்தது.

கள் ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர், சில தினங்களுக்கு முன், பள்ளியில் விசாரித்ததில், தனபால், மாணவியர் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்ந்து , தனபால் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, சி.இ.ஓ., மற்றும் பழங்குடியினர் நலத்திட்ட அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தனபாலை சஸ்பெண்ட் செய்து, பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை நேற்று உத்தரவிட்டார்.

Advertisement