போதைக்காக மருந்துகள் விற்பனை; கண்டறிந்து தடுக்க போகிறது பறக்கும் படை

தமிழகத்தில், போதைக்காக வலி நிவாரண மருந்து பயன்பாடு, கருத்தடை மாத்திரை விற்பனையை கண்டறிந்து தடுக்க, மாவட்டந்தோறும் புதிய சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நடந்த சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில், வலி நிவாரண மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவது மற்றும் விதிமீறிய கருத்தடை மாத்திரை விற்பனையை கண்டறிந்து தடுக்க, பறக்கும்படை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே, சென்னை மற்றும் மதுரையில் பறக்கும் படை உள்ள நிலையில், தற்போது, மாவட்டம் தோறும், புதிய சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த பறக்கும் படையினர், வேறு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
வலி நிவாரணி, ஆன்டிபயாடிக், ஆன்டி எபிலெப்டிக், அபார்ஷன் கிட் மருந்துகளின் கொள்முதல், இருப்பு மற்றும் விற்பனை விபரங்களை சேகரிக்கின்றனர். விதிமீறல் கண்டறியப்பட்டால், மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கின்றனர்.
மருந்து கட்டுப்பாட்டு கோவை மண்டல உதவி இயக்குநர் மாரிமுத்து கூறியதாவது:
சிறப்பு பறக்கும் படையினர், மாதந்தோறும், இருமுறை ஆய்வு நடத்துவர். பறக்கும் படை ஆய்வின்போது, அந்தந்த பகுதி மருந்தக ஆய்வாளர்கள் உடன் இருப்பர்.
முதல்கட்ட ஆய்வில், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக் கிய கோவை மண்டலத் தில், நான்கு மருந்து கடைகள் விதிமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- - நமது நிருபர்-

மேலும்
-
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி; டிஆர்டிஓ புதிய சாதனை
-
வணிக உரிமத் திட்டத்தால் பாட்டிகளின் வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்; அன்புமணி
-
உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா; லோக்சபா விவாதத்தில் கனிமொழி வருத்தம்!
-
பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க விரும்பும் ப.சிதம்பரம்: லோக்சபாவில் அமித் ஷா ஆவேசம்
-
நம் விரல்களை கொண்டே கண்களை குத்தும் சூழ்ச்சி அரசியல்: முதல்வர் ஸ்டாலின்
-
ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் 2வது நாளாக தொடரும் 'ஆபரேஷன் மகாதேவ்'