தி.மு.க., இளைஞரணி கூட்டம் அமைச்சர் கணேசன் அழைப்பு

சிறுபாக்கம் : நெய்வேலியில் நடக்கும் தி.மு.க., மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, மாவட்ட செயலாளர் கணே சன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணியின் மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (29ம் தேதி) மாலை 4:00 மணிக்கு நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடக்கிறது.

இதில், இளைஞரணி அமைப்பாளர்கள் நியமினம், சட்டசபை தொகுதியில் கலைஞர் நுாலகம் அமைப்பது, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கையில் இளைஞரணி செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப் படுகிறது.

எனவே, கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement