உவர் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி

புதுச்சேரி : சுதேசி மில் வளாகத்தில் பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் சார்பில் உவர் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

உருளையன்பேட்டை தொகுதி சுதேசி மில் வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் சார்பில் ரூ.3 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் உவர் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.

முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், நேரு எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.

தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் வாசு, உதவி பொறியாளர் அன்பரசு, இளநிலை பொறியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த உவர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் உருளையன்பேட்டை தொகுதி இளங்கோ நகர், சாந்தி நகர், சாரதி நகர், ராஜிவ்காந்தி நகர், இந்திரா காந்தி நகர், தென்னஞ்சாலை ரோடு, சுப்பையா நகர், மகாலட்சுமி நகர், கண்ணன் நகர், மறைமலை அடிகள் சாலை, டாக்டர்ஸ் காலனி, சஞ்சய் காந்தி நகர், அய்யனார் நகர், ராஜா நகர், முத்தமிழ் நகர், அருந்ததி நகர், திருவள்ளுவர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement