முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு

சென்னை: 'மருத்துவமனையில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாள், ஜோதிட கணக்குப்படி. அவருக்கு மறு பிறப்புக்குரிய நாள்' என, திருக்கோவிலுார் ஜோதிடர் பரணிதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் ஜாதகப்படி, ஏப்ரல், 26 முதல், கேது ஜென்ம ராசியில் சஞ்சரித்து வருகிறார். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிக்கும் போது, உடல் ரீதியாக, பதவி வழியாக, சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும் என்பது பொதுவான விதி.
அதன் காரணமாகவே, ஏப்., 26 முதல், அவருடைய ராசிக்குள், கேது சஞ்சரிக்கும் நாள் வரை, அவரது உடல் நிலையில் சங்கடம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு என்பதை, அனைத்து ஜோதிடர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்த கேதுவுடன், கடந்த மாதம் ரத்தக்காரகனான செவ்வாயும் இணைய, உடல் நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக இதயத்தில் சங்கடம். ரத்த ஓட்டத்தில் பிரச்னை ஏற்பட, அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றார்.
அங்கு சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார். அந்த நேரத்தில் ராசிக்குள் சஞ்சரித்து வரும் செவ்வாய், புதன்கிழமை முதல் கன்னி ராசிக்கு செல்கிறார். அதனால், இதுவரை இருந்த பாதிப்பு குறைய ஆரம்பிக்கும்.
நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பியது, ஜோதிட கணக்குப்படி அவருக்கு மறுபிறப்பு நாளாகும். அதாவது, நேற்று முன்தினம் மாலை மகம் நட்சத்திரம் முடிந்து பூரம் நட்சத்திரம் துவங்கியது.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர், ஒரு கண்டத்தை சந்தித்து, அதே பூரம் நட்சத்திரத்தில் வெளிவருவது என்பது, மறு பிறப்பாகவே கருதப்படும். இதை அறிந்து சரியான நேரத்தில், முதல்வர் வீடு திரும்பி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.











மேலும்
-
போரை நிறுத்தும்படி எந்த உலகத்தலைவரும் சொல்லவில்லை : பிரதமர் மோடி திட்டவட்டம்
-
விமானப் பயணத்திற்கு இடையூறு: பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
டிஜிட்டல் கைது மோசடி: பெண் டாக்டரை ஏமாற்றி ரூ.19 கோடி பறிப்பு
-
பாகிஸ்தானால் இந்திய பதிலடியை தடுக்க முடியவில்லை: பிரதமர் மோடி
-
6 இந்தியர்களுக்கு பாலியல் தொந்தரவு: குற்றத்தை ஒப்புக்கொண்டார் அதிகாரி
-
போர் விமானிகளின் கைகளை கட்டிப்போட்டு விட்டீர்கள்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு