மொளசூர் மகா பெரியவா நகர் அக்ரஹாரம் பிளாட் வாங்குவோருக்கு ஆடி சிறப்பு தள்ளுபடி

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மொளசூரில் உள்ள 'டி.பி.எஸ்., பர்ஸ்ட் சிட்டி' ஸ்ரீ மகா பெரியவா நகர் அக்ரஹாரத்தில் பிளாட் வாங்குவோருக்கு, ஆடி மாத சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் - புதுச்சேரி சாலை மொளசூரில், 'டி.பி.எஸ்., பர்ஸ்ட் சிட்டி' ஸ்ரீ மகா பெரியவா நகர் அக்ரஹாரம், ஆன்மிகம், தர்மம் மற்றும் பாரம்பரியத்தோடு கட்டப்பட்ட தெய்வீக நகரமாக உள்ளது. எஸ்.வி.ஆர்.வி. கீர்த்திவாசன் நிறுவிய ஸ்ரீ அக்ரஹாரம், நம் முன்னோர்கள் வழிபட்ட தர்ம வாழ்வை மறுபடியும் வாழ்வதற்கான ஒளியாய் வளர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2025ம் ஆண்டு ஆடி மாதத்திற்குள் பிளாட் பதிவு செய்பவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தெய்வீக பரிசு வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு சதுர அடியிலும் பக்தியின் ஓசை கேட்கும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து குடும்பங்களுக்கும், வாழ்நாள் வளம் உண்டு என்பதையே ஸ்ரீ அக்ரஹாரம் உறுதி செய்கிறது.
சிறப்பு தள்ளுபடி குறித்து ஸ்ரீ அக்ரஹாரம் குரூப்ஸ் சேர்மன் எஸ்.வி.ஆர்.வி. கீர்த்திவாசன் கூறியதாவது:
முதல் பிளாட் பதிவு செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நேரடி தள்ளுபடி, ஜி.ஆர்.டி., ஜூவல்லர்ஸ் மூலம் 1 கிலோ வெள்ளி பரிசு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சிலிருந்து 1,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு பெட்டி, ஜி.ஆர்.டி., வழங்கும் வரவேற்பு வெள்ளி ஹாம்பர், ராம்கோ சிமெண்ட் மூலம் 40 கிலோ எடையுள்ள 100 மூட்டைகள்.
இரண்டாவது பிளாட் பதிவு செய்தால் 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிமாற்ற கூப்பன் (30 நாட்களுக்கு மட்டுமே) என, மொத்தம் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் குடியமர விரும்பும் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
அதன்படி, தொடக்க தொகை 1 லட்சத்து 1,001 ரூபாய் மட்டும். பதிவு நேரம் ஆடி மாதத்திற்குள் மட்டுமே நடைபெறும். உங்கள் பிள்ளைகள் நிலத்தை மட்டும் அல்ல, தர்மத்தை வாரிசாக பெற வேண்டும் என்ற தொணியில் இந்த திட்டம் பக்தி வாழ்க்கைக்கான புதிய பாதையை திறக்கிறது.
இவ்வாறு கீர்த்திவாசன் கூறினார்.
கூடுதல் விபரங்களுக்கு சி.இ.ஓ., சிவசங்கர் 89391 13434, ஜி.எம்.,சுரேஷ் ஆனந்தன் 97108 25351, ஸ்ரீ அக்ரஹாரம் குழுமம் 99400 66177, www.aghraharam.com தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
'ஆப்பரேஷன் வி'க்கு பண்ருட்டி 'மூவ்' ; விஜய் அணியில் பன்னீர், அன்புமணி?
-
போலி வக்கீல்கள் அதிகரிப்பு; கர்நாடக கவுன்சில் எச்சரிக்கை
-
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி
-
கோத்ரா கலவர வழக்கு 19 ஆண்டுகளுக்கு பின் 3 பேர் விடுதலை
-
எஸ்.பி.ஐ., வங்கியில் 10 கிலோ தங்கம் கொள்ளை
-
நீரேற்று மின் நிலைய திட்டத்தை செயல்படுத்த என்.எல்.சி., விருப்பம்