கோத்ரா கலவர வழக்கு 19 ஆண்டுகளுக்கு பின் 3 பேர் விடுதலை

ஆமதாபாத் : குஜ ராத்தில், கோத்ரா கலவரத்துக்கு பிந்தைய வன்முறை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மூன்று பேரை, ஆதாரங்கள் இல்லாததால், 19 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தின் கோத்ராவில், 2002 பிப்., 27-ல், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப் பட்டதில், 59 பேர் உயிரிழந்தனர். அதன்பின், மாநிலம் முழுதும் கலவரம் வெடித்தது.
ஆனந்த் மாவட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில், சச்சின் படேல், அசோக் படேல், அசோக் குப்தா உள்ளிட்ட நான்கு பேருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, 2006 மே 29ல், அம்மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, நான்கு பேரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதற்கிடையே, 2009ல் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி கீதா கோபி தலைமையிலான அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு:
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள சச்சின் படேல், அசோக் படேல், அசோக் குப்தா ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பு உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே மூன்று பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்
-
விண்ணில் பாய்ந்தது நிசார் செயற்கைக்கோள்
-
திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இதுதான்; பகீர் வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம்
-
பாஜ., மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியானது: அமைப்பு பொதுச்செயலாளராக மீண்டும் கேசவவிநாயகன் நியமனம்
-
லெஜன்ட் கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு
-
மகளைப் பார்த்து படிக்க ஆர்வம் வந்தது; தாயும், மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., சீட் பெற்று சாதனை!
-
'மறு ஆய்வு செய்து கொள்ளுங்கள்' : எதிர்க்கட்சிகளுக்கு நட்டா அறிவுரை