எஸ்.பி.ஐ., வங்கியில் 10 கிலோ தங்கம் கொள்ளை

ஹிந்துபூர் : ஆந்திராவின் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் உள்ள துமுகுண்டா கிராமத்தில் எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளது.


காவலாளி இல்லாத இந்த வங்கி கிளையில், கடந்த 27ம் தேதி இரவு கொள்ளையர்கள் சிலர் புகுந்தனர்.



வங்கி லாக்கரில் இருந்த 10 கிலோ தங்க நகைகள் மற்றும் 38 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை அழித்துவிட்டு தப்பினர்.



இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வங்கியை திறக்க வந்த ஊழியர் வங்கியில் பணம், நகை கொள்ளை போனதை அறிந்து வங்கி மேலாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகே கொள்ளை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Advertisement