'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர் : போர் ஆயுதங்களை சுமந்து சென்று, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்த 'பிரளய்' ஏவுகணை சோதனையை, டி.ஆர்.டி.ஓ., வெற்றிகரமாக ந டத்தியுள்ளது.
ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த ஏவுகணை திங்கள் மற்றும் செவ்வாய் என அடுத்தடுத்து இரு நாட்கள் சோதிக்கப்பட்ட தாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறுகிய துார இலக்குகளை தாக்கும் வகையில், 'பிரளய்' ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் மேம்படுத்தியுள்ளது.
வெற்றிகரமாக சோதனை நடத்திய டி.ஆர்.டி.ஓ., ராணுவ படைகள் மற்றும் இத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். 150 முதல் 500 கி.மீ., துாரம் வரை தரைவழி இலக்குகளை தாக்கும் வகையில், 'பிரளய்' ஏவுகணை வடிவமைக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த ஏவுகணையின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஏவு திறன் இந்த சோதனை மூலம் கண்டறியப்பட்டது.
நவீன தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகணை வாயிலாக, நம் ராணுவ பலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
-
அஜித்குமார் கொலை வழக்கில் திமுகவுக்கு முழுபொறுப்பு: வலியுறுத்தினார் இபிஎஸ்
-
விண்ணில் பாய்ந்தது நிசார் செயற்கைக்கோள்
-
திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இதுதான்; பகீர் வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம்
-
பாஜ., மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியானது: அமைப்பு பொதுச்செயலாளராக மீண்டும் கேசவவிநாயகன் நியமனம்
-
லெஜன்ட் கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு
-
மகளைப் பார்த்து படிக்க ஆர்வம் வந்தது; தாயும், மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., சீட் பெற்று சாதனை!