ஹிமாச்சலில் மேக வெடிப்பு; கனமழைக்கு 3 பேர் உயிரிழப்பு

சிம்லா, ஹிமாச்சல பிரதேசத்தில், மேக வெடிப்பால் கொட்டி தீர்த்த கனமழையில் சிக்கி, மூன்று பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மண்ணில் புதைந்தன.
ஹிமாச்சலில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மண்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு, மேக வெடிப்பால் திடீரென பலத்த மழை கொட்டியது.
இதனால், ஜெயில் சாலை, சைனி மொஹல்லா, மண்டல மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
மழை, வெள்ளத்தோடு குப்பைக் கழிவுகளும் அடித்துச் செல்லப்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தன. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், மூன்று பேர் உயிரிழந்தனர். காணாமல் போன பெண் ஒருவரை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது. மேலும், 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மண்ணில் புதையுண்டன.
மண்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இதுவரை, 20 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
விண்ணில் பாய்ந்தது நிசார் செயற்கைக்கோள்
-
திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இதுதான்; பகீர் வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம்
-
பாஜ., மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியானது: அமைப்பு பொதுச்செயலாளராக மீண்டும் கேசவவிநாயகன் நியமனம்
-
லெஜன்ட் கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு
-
மகளைப் பார்த்து படிக்க ஆர்வம் வந்தது; தாயும், மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., சீட் பெற்று சாதனை!
-
'மறு ஆய்வு செய்து கொள்ளுங்கள்' : எதிர்க்கட்சிகளுக்கு நட்டா அறிவுரை