லெஜன்ட் கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு

12

புதுடில்லி: உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜன்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் விளையாட இந்திய வீர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜன்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் பாகிஸ்தான், தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.


இதில், முதல் அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோத இருக்கின்றன. இந்த சூழலில், பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானுடன் விளையாட இந்திய வீரர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


ஏற்கனவே, லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர். எனவே, பாகிஸ்தான் விளையாடாமலே இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

Advertisement