நிமிஷாவின் 'துாக்கு' ரத்து? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு!

புதுடில்லி, : ஏமனில், கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் துாக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவலை, நம் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா, 38, கடந்த 2008ல், மேற்காசிய நாடான ஏமனுக்கு வேலைக்காக சென்றார்.
அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து, 'கிளினிக்' துவங்கினார்.
தொழில் போட்டியால், 2017ல், அவரை நிமிஷா பிரியா கொலை செய்தார். இந்த வழக்கில்,
அவருக்கு 2020ல் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 16ம் தேதி நிமிஷா பிரியாவுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், மத்திய அரசு மற்றும் கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர் காந்தாபுரம் அபுபக்கர் முஸ்லியார் மத்தியஸ்தத்தில் ஈடு பட்டதை அடுத்து, தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டது.
இதற்கிடையே, நிமிஷா பிரியாவின் துாக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாகவும், எனினும், ஏமன் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ கடிதம் வரவி ல்லை என்றும், அபுபக்கர் முஸ்லியாரின் அலுவலகம் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், இந்த தகவலை நம் வெளி யுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 'நிமிஷா பிரியாவின் துாக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை' என, அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது.


மேலும்
-
அஜித்குமார் கொலை வழக்கில் திமுகவுக்கு முழுபொறுப்பு: வலியுறுத்தினார் இபிஎஸ்
-
விண்ணில் பாய்ந்தது நிசார் செயற்கைக்கோள்
-
திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இதுதான்; பகீர் வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம்
-
பாஜ., மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியானது: அமைப்பு பொதுச்செயலாளராக மீண்டும் கேசவவிநாயகன் நியமனம்
-
லெஜன்ட் கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு
-
மகளைப் பார்த்து படிக்க ஆர்வம் வந்தது; தாயும், மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., சீட் பெற்று சாதனை!