அஜித்குமார் கொலை வழக்கில் திமுகவுக்கு முழுபொறுப்பு: வலியுறுத்தினார் இபிஎஸ்

சென்னை: அஜித்குமார் கொலைக்கு முழு பொறுப்பை திமுக ஏற்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தினார்.
அரவது அறிக்கை:
தமிழக அரசின் காவல்துறை அராஜகத்தால் மரணமடைந்த திருப்புவனம் அஜித்குமாரின் இல்லத்திற்கு சென்று, அவரது தாயார் மற்றும் தம்பிக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
நகை திருட்டுக்கான குற்றச்சாட்டை முறையாக பதிவு செய்து , இந்த திமுக அரசின் காவல்துறை விசாரித்து இருந்தால், அஜித்குமாரின் விலைமதிப்பில்லாத உயிர் போயிருக்காது. எனவே, அஜித்குமாரின் கொலைக்கு முழு பொறுப்பை திமுக அரசு ஏற்க வேண்டும்!
அஇஅதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட கழக செயலாளரே களத்தில் நின்று போராடியும், கழக வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் கழகம் அளித்த தொடர் அழுத்தத்தாலும், நீதிமன்றத்தின் கடுமையான கண்டிப்புக்கும் இணங்கவே ,வேண்டா வெறுப்பாக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளார் பொம்மை முதல்வர் ஸ்டாலின்.
அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு தக்க இடத்தில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் ; அஇஅதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்தேன்.
அஜித்குமார் குடும்பத்தாருக்கு அதிமுக என்றும் துணை நிற்கும்.
இவ்வாறு இபிஎஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும்
-
தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
கொலையுண்ட கவின் உடன் என்ன உறவு: தோழி வீடியோ வெளியீடு
-
கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை; அண்ணாமலை ஆவேசம்
-
துணைவேந்தர் நியமன விவகாரம்; கேரள அரசு மற்றும் கவர்னருக்கு கூட்டு அதிகாரம்
-
பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓபிஎஸ்
-
இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்: ராகுல் கடும் தாக்கு