கிராமங்களிலும் தொழில் செய்ய முடியாது: பழனிசாமி

காரைக்குடி: கிராமத்தில், டீக்கடை, தையல் கடை, சலவை கடை, பெட்டி கடை வைத்தால் கூட லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று அறிவித்து மக்களிடம் வசூலிக்கின்றனர்' என முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசினார். -
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற இரண்டாம் கட்ட பிரசாரத்தை துவக்கி பழனிசாமி பேசியதாவது:
காரைக்குடி மேயரை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. நகராட்சிக்கு சொந்தமான இடங்க ளை லஞ்சம் பெற்றுக் கொண்டு பல ஆண்டுகளுக்கு மேயர் குத்தகைக்கு விட்டுள்ளார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்தி தீர்வு காணப்படும். எந்த வரியும் உயர்த்த மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் கடைக்கு 150 சதவீத வரி, வீடுகளுக்கு 100 சதவீத வரி உயர்த்தி விட்டனர். கு ப்பைக்கு கூட வரி போடும் அரசு தி.மு.க., அரசு.
மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால் இந்த ஆட்சியில் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. மூன்று ஆண்டுக்கு முன்பே 52 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். இதுவரை, 67 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தி விட்டனர். மின் கட்டண உயர்வால் நம் மாநிலத்திற்கு வரவேண்டிய தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலத்திற்கு சென்று விட்டன.
கிராமங்களில் டீக்கடை, தையல் கடை, சலவை கடை, பெட்டி கடை வைத்தால் கூட, லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். கிராமங்களிலும் இனி யாரும் தொழில் செய்ய முடியாது. இதன் வாயிலாகவும் வசூலித்து மக்கள் வயிற்றில் அடிக்கப் பார்க்கிறது தி.மு.க., அரசு.
முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னார்கள்; வருத்தப்பட்டேன். ஆனால், மருத்துவமனையில் டேபிள் போட்டு அமர்ந்து சினிமா சூட்டிங் எடுப்பதுபோல காட்சி கொடுத்தார்.
பயிர் கடனுக்கு சிபில் ஸ் கோர் வேண்டும் என்று விவசாயிகளை அலைக்கழித்தனர். இதுகுறித்து, நாங்கள் பிரதமரிடம் முறையிட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
பாட்மின்டன்: ரக் ஷித்தா வெற்றி
-
உலக விளையாட்டு செய்திகள்
-
பிரிட்டனில் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் அமெரிக்கா; ரஷ்யாவுக்கு எச்சரிக்கை
-
நியூசிலாந்து அணி அபார பந்துவீச்சு: 149 ரன்னுக்கு சுருண்டது ஜிம்பாப்வே
-
பிரான்ஸ் வீரர் சாதனை: உலக நீச்சல் போட்டியில்
-
ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்