ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா, முதலிடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, 422 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மான்செஸ்டர் டெஸ்டில் 'ஆல்-ரவுண்டராக' (4 விக்கெட், 107* ரன்) அசத்தினார்.


இப்பட்டியலில் 8 இடம் முன்னேறிய தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், 13வது இடத்தை நியூசிலாந்தின் மாட் ஹென்றியுடன் பகிர்ந்து கொண்டார். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (301 புள்ளி) 6வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார்.

பன்ட் 'நம்பர்-7': பேட்டர் தரவரிசையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் (776), 7வது இடத்துக்கு முன்னேறினார். துவக்க வீரர் ஜெய்ஸ்வால், 5வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மான்செஸ்டர் டெஸ்டில் சதம் விளாசிய வாஷிங்டன் சுந்தர் (447), 8 இடம் முன்னேறி 65வது இடத்தை கைப்பற்றினார். முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (904)
தொடர்கிறார்.

பவுலர் தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (898) முதலிடத்தில் நீடிக்கிறார். ஒரு இடம் முன்னேறிய ஜடேஜா (682), 14வது இடத்தை கைப்பற்றினார்.


@quote@

அபிஷேக் முதலிடம்



சர்வதேச 'டி-20' போட்டிக்கான பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா, 829 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (814) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 'டி-20' தொடரில் பங்கேற்காத ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (814) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்லிஸ், 15வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறினார். quote

Advertisement