உலக விளையாட்டு செய்திகள்

காலிறுதியில் ஸ்பெயின்
தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஆண்களுக்கான (19 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-16' போட்டியில் ஸ்பெயின், அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் அணி 3-0 (25-22, 25-23, 27-25) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
கோகோ காப் வெற்றி
மான்ட்ரியல்: கனடாவின் மான்ட்ரியலில் நடக்கும் நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், டேனியல் கோலின்ஸ் மோதினர். இதில் கோகோ காப் 7-5, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பைனலில் பிரேசில்
கியூட்டோ: ஈகுவடாரில் நடக்கும் பெண்கள் கோபா அமெரிக்கா கால்பந்து அரையிறுதியில் பிரேசில், உருகுவே அணிகள் மோதின. இதில் பிரேசில் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பைனலில் (ஆக. 2) கொலம்பியா, பிரேசில் அணிகள் மோதுகின்றன.
ஜெர்மனி ஜெயம்
டசல்டோர்ப்: ஜெர்மனியில் நடக்கும் பெண்களுக்கான ஐரோப்பிய பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் ஜெர்மனியின் ஸ்வென்ஜா, சின்ஜா ஜோடி 2-0 (21-10, 21-13) என்ற கணக்கில் ஸ்பெயினின் மரியா பெலென், மார்டா கார்ரோ ஜோடியை வீழ்த்தியது.
எக்ஸ்டிராஸ்
* மணிப்பூரின் இம்பாலில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் 'டிடிம் ரோடு அத்லெடிக் யூனியன்' (டி.ஆர்.ஏ.யூ.,), 'நெரோகா' அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
* கிரீசில் நடக்கும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு இந்தியாவின் ரச்சனா (43 கி.கி.,), மோனி (57 கி.கி.,), அஷ்வினி விஷ்னோய் (65 கி.கி.,), காஜல் (73 கி.கி.,) முன்னேறினர்.
* பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக பாரத் அருண் நியமிக்கப்பட உள்ளார். முன்னாள் இந்திய பயிற்சியாளரான இவர், கடந்த சீசனில் கோல்கட்டா அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்தார்.
மேலும்
-
காங்கிரஸ் பிரமுகரின் ரூ.200 கோடி மோசடி: அமலாக்கத்துறை அந்தமானில் முதல் முறை சோதனை
-
அரசியலில் எதுவும் நடக்கலாம்: முதல்வரை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி
-
செனாப் நதியில் நீர்மின் திட்டம்: டெண்டர் கோரியது மத்திய அரசு: பாகிஸ்தான் அதிர்ச்சி
-
யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் கவினின் தோழி: திருமாவளவன் சந்தேகம்
-
இந்திய நலன்களில் சமரசம் இல்லை : அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்
-
டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம் சாட்டிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்