118 வகை விழாக்களுடன் கற்பித்தல் பணி ஆசிரியர்கள் புலம்பல் வீடியோ வைரல்

ஆ சிரியர்கள் பாடம் கற்பித்தலோடு, பல்வேறு தலைவர்களின் விழாக்கள், விளையாட்டு போட்டிகள் உட்பட 118 வகையான பணிகளை ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்றால் பாடம் எப்படி நடத்துவது எப்போது என கேட்டு 'வாட்ஸ் ஆப்' பில் பதிவு செய்திருப்பது வைரலாகி வருகிறது.


ஆசிரியர்கள் பாடம் நடத்துவதோடு, அது தொடர்புடைய காமராஜர் விழா, அண்ணா விழா, ஆசிரியர் தின விழா, குழந்தைகள் தினவிழா, எரி சக்தி தினவிழா, காந்தியடிகள் விழா, இலக்கியமன்ற விழா, முதலமைச்சர் கோப்பை விளையாட்டு விழா, முதல்வர் திறன் தேர்வு என, 118 வகையான பணிகள் செய்யுமாறு அரசு தரப்பில் பணிக்கப்பட்டுள்ளது. இது இல்லாமல் 'நடுவில் கொஞ்சம் கற்றலைத்தேடி' என பின் தங்கிய மாணவர்களுக்கு தனிப்பாடம் கற்றுத்தர வேண்டும்.

ஒரு கல்வியாண்டில் வேலைநாட்களாக 200 நாட்கள் இருந்தால் போதுமானது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதில் முக்கால் வாசி நாட்கள் அரசு விழாக்கள், போட்டிகள் என நடத்திக் கொண்டே இருந்தால் பாடம் கற்பிப்பது எப்போது என கேள்வி கேட்டு பதிவு செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement