காஞ்சிபுரம்: புகார் பெட்டி செய்தி; வர்ணம் பூசாத வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி

வர்ணம் பூசாத வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி



சு ங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சாலையில், அதிவேகமாக வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வேகத்தடை மீது வெள்ள நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது. மேலும், வேகத்தடையை அறிவுறுத்தும் வகையில் எச்சரிக்கை பலகையும் அமைக்கவில்லை.

இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது தெரியாமல், நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே, வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூச நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மா. புஷ்பராஜ், சுங்குவார்சத்திரம்.

Advertisement