தங்கம் வென்றார் ஹர்தீப் * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் அபாரம்

ஏதென்ஸ்: உலக மல்யுத்த ஜூனியர் சாம்பியன்ஷிப், 'ஹெவிவெயிட்' பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார் ஹர்தீப்.
கிரீசில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (17 வயது) நடக்கிறது. கிரிகோ ரோமன், 110 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் 16 வயது வீரர் ஹர்தீப், ஈரானின் யஸ்டன் எசேவை சந்தித்தார். போட்டி முடிவதற்கு சற்று முன் 2-3 என பின்தங்கிய ஹர்தீப், கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட 3-3 என சமன் செய்தார். இருப்பினும், கடைசியாக புள்ளி எடுத்த வீரர் அடிப்படையில் ஹர்தீப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, இத்தொடரில் இந்தியா முதல் தங்கம் வென்றது.
முதல் இந்தியர்
இதையடுத்து, உலக சாம்பியன்ஷிப்பில் 'ஹெவிவெயிட்' (110 கிலோ) பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார் ஹர்தீப். வினோத் குமார் (1980, 45 கிலோ), பப்பு யாதவ் (1990, 51), சுராஜ் வஷிஸ்த்திற்கு (2022, 55) அடுத்து, உலக மல்யுத்த ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நான்காவது இந்தியர் ஆனார் ஹர்தீப்.
பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடக்கின்றன. 43 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரச்சனா, 13-2 என எகிப்தின் மரியமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். 65 கிலோ போட்டியில் இந்தியாவின் அஷ்வினி, 13-0 என மங்கோலியாவின் அனுஜினை சாய்த்து, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மேலும்
-
அயர்லாந்தில் இந்தியர் மீது மர்ம கும்பல் திடீர் தாக்குதல்: மீண்டும் ஒரு கொடூர சம்பவம்!
-
காங்கிரஸ் பிரமுகரின் ரூ.200 கோடி மோசடி: அமலாக்கத்துறை அந்தமானில் முதல் முறை சோதனை
-
அரசியலில் எதுவும் நடக்கலாம்: முதல்வரை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி
-
செனாப் நதியில் நீர்மின் திட்டம்: டெண்டர் கோரியது மத்திய அரசு: பாகிஸ்தான் அதிர்ச்சி
-
யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் கவினின் தோழி: திருமாவளவன் சந்தேகம்
-
இந்திய நலன்களில் சமரசம் இல்லை : அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்