சுதந்திர தின விழா கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில் ஆக., 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளதையொட்டி மைதானம் சீரமைக்கும் பணி, அலுவலர்கள், பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள், பந்தல் அமைத்தல், போலீசார் பாதுகாப்பு பணி, குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிடம் அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை செய்தார்.

அலுவலர்கள் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள கலெக்டர் அறிவுரை வழங்கினார். இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, தனித்துணை ஆட்சியர் முகுந்தன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement