புலிகள் வாழ்விடங்கள் மீளுருவாக்கம்: முதல்வர் உறுதி

சென்னை: 'புலிகளின் வாழ்விடங்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உலக புலிகள் தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:




தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய தரவுகளின்படி, 306 புலிகள் தமிழகத்தில் உள்ளன. இந்த வெற்றிக்கு காரணம், புலிகளின் வாழிடங்களை பாதுகாக்கும், நம் வனத்துறை பணியாளர்களும், வேட்டை தடுப்பு அணியி னரும் தான்.

வனங்களை பாதுகாக்கும் பணியை மேம்படுத்தி, 1,947 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. வனத்துறையினருக்கு நவீன உடைகள், தொழில்நுட்பக் கருவிகள் வழங்கப்படுகின் றன. கால்நடை மருத்துவர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .

அயல் ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றி, புலிகளின் வாழ்விடங்கள் மீளுருவாக் கம் செய்யப்பட்டு வரு கின்றன. காடுகளின் வளம் மேம்படுத்தப்படுகிறது.

கானுயிர் மீதான குற்றங்கள் புரியும் கும்பல்களை அடக்க, தமிழக வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு எனும் சிறப்பு பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. புலிகளை பாதுகாப்பதன் வாயிலாக, நம் காடு களின் ஆன்மாவை நாம் பாதுகாக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement