ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தில்லைகோவிந்தன், ரங்கசாமி, முத்துலிங்கம், பாலசுப்ரமணியன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாலசுப்ரமணியன் கண்டன உரையாற்றினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Advertisement