காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சஷ்டி வழிபாடு
மல்லசமுத்திரம், ஆடி வளர்பிறை சஷ்டியையொட்டி, நேற்று சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், காலை 6:00 மணி முதல் மாலை வரையில் மூலவருக்கு குங்குமம், திருநீறு, பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், கரும்புசாறு உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கோவில் முழுவதும் பலவகை மலர்கள், கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கோவில் உட்பிரகாரத்தில் உற்சவ மூர்த்தியான முருகன், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு பிரசாதம்
வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
-
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'
-
முன்னிலை பெற்றது நியூசிலாந்து: கான்வே, மிட்செல் அரைசதம்
-
பிரான்ஸ் வீரர் 'தங்கம்': உலக நீச்சல் போட்டியில்
Advertisement
Advertisement