காரில் இருந்து வாலிபர் சடலம் மீட்பு
நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் அருகே, சீராப்பள்ளி மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் அய்யனார், 35; கூலித்தொழிலாளி. திருமணமாகவில்லை. குடிப்பழக்கம் இருந்தது. கடந்த, மூன்று நாட்களுக்கு முன் வீட்டை விட்டு சென்ற அய்யனார், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று சீராபள்ளியில் இருந்து ஒடுவன் குறிச்சி செல்லும் சாலையில் பழுதாகி நின்றிருந்த காரில் துர்நாற்றம் வீசியது. அருகில் சென்று பார்த்தபோது, சடலம் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடலை கைப்பற்றிய போலீசார், விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
-
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'
-
முன்னிலை பெற்றது நியூசிலாந்து: கான்வே, மிட்செல் அரைசதம்
-
பிரான்ஸ் வீரர் 'தங்கம்': உலக நீச்சல் போட்டியில்
Advertisement
Advertisement