மக்காச்சோளம் செயல்விளக்கத்திடல் அமைக்க மானியத்தில் இடுபொருள்

மோகனுார் :'மக்காச்சோளம் செயல்விளக்கத்திடல்கள் அமைக்க, மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது' என, மோகனுார் வேளாண் உதவி இயக்குனர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மோகனுார் வட்டாரத்தில், பரளி, லத்துவாடி, அரூர், என்.புதுப்பட்டி, குமரிபாளையம், வளையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், மக்காச்சோளம் சாகுபடி அதிக ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது.


மக்காச்சோளம் பயிர் சாகுபடியை அதிகரிக்கும் வகையில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மக்காச்சோளம் செயல்விளக்க திடல்கள் அமைப்பதற்கான இடுபொருட்களான விதைகள், உயிர் உரங்கள் மற்றும் உயிர்ம உரங்கள் உள்ளிட்டவை, 6,000 ரூபாய் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.
செயல் விளக்கத்திடல்கள் அமைக்க விருப்பம் உள்ள விவசாயிகள், உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். அல்லது வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement