காஞ்சிபுரம்: புகார் பெட்டி செய்தி; கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பம் அகற்றப்படுமா?

கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பம் அகற்றப்படுமா?



உ த்திரமேரூர் தாலுகா, தளவாரம்பூண்டி கிராமத்தில், விளை நிலங்களில் மின் வாரியத் துறையினர் மின் கம்பங்கள் நட்டுள்ளனர். அதன் மூலம், அப்பகுதி விவசாய பம்ப் செட்டுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்திரமேரூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள மின் கம்பம் ஒன்று சேதமடைந்து உள்ளது. மின் கம்பத்தில் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

இந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழுந்து மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் விவசாயிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள மின் கம்பத்தை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- ஆர். தமிழ்ச்செல்வன்,

தளவாரம்பூண்டி.

Advertisement