கொள்ளையடிக்க திட்டம்: நெய்வேலியில் 9 பேர் கைது
நெய்வேலி: நெய்வேலியில் வீடுகளில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி, இந்திரா நகர், தைலம் மர தோப்பில் மர்ம கும்பல் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நெய்வேலி இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, 9 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், மேல் வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த வீரமணி,27; நெய்வேலி, இந்திரா நகர் சதீஷ்,23; சஞ்சய்,23; தனுஷ்,18; அறிவழகன்,19; ரவிக்குமார்,23; பவித்ரன்,29; வடக்குத்து சூர்யா,24; நெய்வேலி நவீன்,20; என்பதும், கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து 9 பேரையும் கைது செய்து, அரிவாள், இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சி.என்.ஜி., தொழில்நுட்பத்திற்கு 1,000 பஸ்களை மாற்ற நடவடிக்கை
-
இந்திய அணி திணறல் ஆட்டம் * மழையால் போட்டி பாதிப்பு
-
ஹனிமூன் சென்ற டாக்டர் தம்பதி மரணம் சுற்றுலா நிறுவனம் ரூ.1.60 கோடி தர உத்தரவு
-
கூட்டுறவு வங்கிகளில் இணையவழி சேவை
-
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'
-
கருணை வேலை தராதது ஏன்? போக்குவரத்து துறைக்கு கேள்வி
Advertisement
Advertisement