கூட்டுறவு வங்கிகளில் இணையவழி சேவை

சென்னை:தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தேசிய மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக பல்வேறு சேவைகளை வழங்குகின்றன.

அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவங்குவதில் உள்ள நடைமுறையை எளிதாக்கவும், தாமதத்தை தவிர்க்கவும், இணைய வழியில் சேமிப்பு கணக்கு துவக்குவது, கடன்களை இணைய வழியில் வழங்குவது உள்ளிட்ட சேவைகள் செயல்படுத்தப்பட உள்ளன.

இதற்காக, டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கன்சல்டன்சி நிறுவனம், இணைய வழியில் சேமிப்பு கணக்கு துவக்குவதற்கு மென்பொருள் உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. விரைவில் இந்த சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால், கூடுதல் வாடிக்கையாளர்களை சேர்க்க முடியும்.

அதற்கு ஏற்ப, வங்கியின் வியாபாரம் மேலும் அதிகரிக்கும்.

Advertisement