கருணை வேலை தராதது ஏன்? போக்குவரத்து துறைக்கு கேள்வி
சென்னை:'மருத்துவ ரீதியாக தகுதி இழக்கும், போக்கு வரத்து கழக தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்காதது ஏன்' என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, போக்குவரத்து துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு துறை ஊழியர்கள், மருத்துவ ரீதியாக பணியாற்றும் தகுதியை இழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது.
அதேபோல, போக்குவரத்து கழக தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கும், கருணை அடிப்படையில் வேலை வழங்க, கொள்கை வகுத்து அமல்படுத்த உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழலுக்கு எதிரான தொழிற்சங்கப் பேரவை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி எம்.சுதீர்குமார் அடங்கிய அமர்வு, 'தமிழக அரசின் போக்குவரத்து துறையில், நிர்வாகப் பிரிவில் பணி புரியும் ஊழியர்கள், மருத்துவ ரீதியாக தகுதி இழக்கும் போது, அவர்களின் குடும்பத்தினருக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது.
'ஆனால், நேரடியாக பொது போக்குவரத்து வசதிகளை வழங்கும் பணியில் உள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு, அந்த சலுகை வழங்காதது ஏன்' என, கேள்வி எழுப்பியது.
மேலும், இது சம்பந்தமாக வரும் 19ம் தேதிக்குள், தமிழக போக்குவரத்து துறை செயலர், அரசு போக்குவரத்து கழகங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
மேலும்
-
சென்னையில் இருந்து குவைத் கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு
-
நிமிஷா பிரியாவின் தண்டனை இன்னும் ரத்தாகவில்லை: காப்பாற்ற அனைத்து முயற்சியும் மேற்கொள்வதாக அரசு அறிவிப்பு
-
புதிய திட்டங்களுக்கு முதல்வர் பெயர் பயன்படுத்த தடை விதித்தது ஐகோர்ட்
-
அயர்லாந்தில் இந்தியர்கள் மீது கொடூர தாக்குதல்; எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
-
பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்க விருப்பம்
-
ஆக.17ல் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்: ராமதாஸ் அறிவிப்பு