கலிபோர்னியாவில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க கடற்படை போர் விமானம்

கலிபோர்னியா: அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எப்-35சி ரக போர் விமானம், பயிற்சியின் போது கலிபோர்னியாவில் கீழே விழுந்து நொறுங்கியது.
மத்திய கலிபோர்னியாவின் ப்ரெஷ்னோ நகரில் இருந்து தெற்கு மேற்கு பகுதியின் 64 கிலோ மீட்டர் தொலைவில் கடற்படைக்கு சொந்தமான லீமோர் கடற்படை விமான தளம் அமைந்துள்ளது. இங்கு எப்-35சி ரக போர் விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானி வெளியே குதித்து உயிர் தப்பினார்.
எப்-35சி ரக விமானங்கள், பயிற்சி மற்றும் போரின் போது பயன்படுத்தப்படுகிறது. கடற்படையின் வி.எப் 125 ரப் ரைடர்ஸ் எனப்படும் பயிற்சி படைப்பிரிவினர் எப்-35 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த விமானம் விபத்தில் சிக்கியது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.




மேலும்
-
தர்மஸ்தலாவில் எலும்புகள்: தோண்டும் பணியில் திடுக் திருப்பம்
-
சி.என்.ஜி., தொழில்நுட்பத்திற்கு 1,000 பஸ்களை மாற்ற நடவடிக்கை
-
'தினமலர்' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ.,வில் இன்று அமர்க்கள ஆரம்பம் 4 நாட்கள் திருவிழாவில் தள்ளுபடிகள் ஏராளம்
-
திருமலையில் 'ரீல்ஸ்' எடுக்க தடை
-
டிக்கெட் வழங்காமல் போனில் அரட்டை: கர்நாடக ரயில்வே கிளர்க் சஸ்பெண்ட்
-
ஸ்குவாஷ்: இந்தியா வெண்கலம்