ஸ்குவாஷ்: இந்தியா வெண்கலம்

கெய்ரோ: உலக ஜூனியர் அணிகளுக்கான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் 13 ஆண்டுக்குப் பின், இந்திய ஆண்கள் அணி பதக்கம் (வெண்கலம்) வென்றது.
எகிப்தில் உலக ஜூனியர் அணிகளுக்கான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் தொடர் நடந்தது. இதன் அரையிறுதியில் இந்திய ஆண்கள் அணி, வலிமையான அமெரிக்காவை எதிர்கொண்டது. முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சந்தேஷ், அமெரிக்காவின் அலெக்சாண்டர் மோதினர். முதல் இரு செட்டை 3-11, 2-11 என எளிதாக இழந்த சந்தேஷ், அடுத்த செட்டையும் 5-11 என கோட்டை விட்டார். முடிவில் சந்தேஷ் 0-3 என தோல்வியடைந்தார்.
அடுத்த போட்டியில் இந்தியாவின் அரிஹந்த், அமெரிக்காவின் ஜாக்கை சந்தித்தார். இதில் அரிஹந்த், 0-3 என (6-11, 4-11, 7-11) தோல்வியடைந்தார். முடிவில் இந்திய அணி 0-2 என தோற்க, 13 ஆண்டுக்குப் பின் வெண்கல பதக்கம் வென்றது.
5 முதல் 8 வரையிலான இடத்திற்கான போட்டியில் இந்திய பெண்கள் அணி, 0-2 என கனடாவை வீழ்த்தியது.
மேலும்
-
தசராவுக்கான கஜ பயண ஏற்பாடுகள் தீவிரம்
-
ஆடிப்பெருக்கில் அட்டகாச பரிசு தங்கமயில் ஜூவல்லரி அறிவிப்பு
-
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு தடை
-
விகாஸ் குமார் விகாஸ் ஐ.பி.எஸ்., சஸ்பெண்ட் உத்தரவும் ரத்து
-
100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
-
'மாஜி' அமைச்சரின் மகன், மகளுக்கான சிறை தண்டனையை நிறுத்திய உத்தரவு ரத்து