இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: 5 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாற்றம்

லண்டன்: லண்டனில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 141 ரன்களை எடுத்து தடுமாறிவருகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து, 2--1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் இன்று லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் போப் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
ஐந்தாவது டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை இழக்காமல் தப்பிக்கலாம் என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது.
இதனையடுத்து இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ஜெயிஸ்வால் கேஎல் ராகுல் களமிறங்கினர். ஜெயிஸ்வால் 2 ரன்கள் எடுத்திருந்த போது, அட்கின்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 14 ரன்னில் வோக்ஸ் பந்தில் போல்டானார்.
பிறகு சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். இந்திய அணி 23 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
பிறகு மழை நின்றதும் போட்டி துவங்கியது. 21 ரன்கள் எடுத்து இருந்த சுப்மன் கில் ரன் அவுட்டானார். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. மீண்டும் மழை வந்ததால் ஆட்டம் தடைபட்டது.
மீண்டும் போட்டி நடந்து வருகிறது. 3 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. மீண்டும் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் சாய்சுதர்சன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரவிந்திர ஜடேஜாவும் 9 ரன்களில் அவுட்டானார்.
இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.
அர்ஷ்தீப் அறிமுகம்
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் காயம் காரணமாக நீக்கப்பட்டு துருவ் ஜூவல் சேர்க்கப்பட்டார். ஷர்துல் தாக்கூர், பும்ரா, அன்ஷூல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டு கருண் நாயர், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்திய அணி விவரம்
சுப்மன் கில்(கேப்டன்), ஜெயிஸ்வால், கேஎல்ராகுல், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ரவிந்திர ஜடேஜா, துருவ் ஜூவல், கருண் நாயர், ஆகாஷ் தீப், பிரஷித் கிருஷ்ணா, முகமது சிராஜ்
போப் கேப்டன்
ஸ்டோக்ஸ் காயத்தால் விலகியதால் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி, போப் தலைமையில் களமிறங்கியது.
இந்தியாவின் இடதுகை பேட்டர்களுக்கு தொல்லை தந்த வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர், சுழற்பந்து வீச்சாளர் டாசன் , கார்ஸ் நீக்கப்பட்டனர். அட்கின்சன், ஓவர்டன், பெத்தெல் வருகை பலம் சேர்க்கலாம்.
அணி விபரம்: போப் (கேப்டன்), டக்கெட், கிராலே, ஜோ ரூட், பெத்தெல், ஜேமி ஸ்மித், வோக்ஸ், அட்கின்சன், ஹாரி புரூக், ஓவர்டன், டங்க்
@quote@
கடைசியாக நடந்த 15 சர்வதேச போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக டாஸ் தோல்வியடைந்தது வருவது குறிப்பிடத்தக்கது.quote
மேலும்
-
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு; தண்டனை விபரம் நாளை வெளியீடு
-
ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மஹாதேவ்: 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
-
பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்; சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்
-
செப்.,9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல்: அறிவித்தது தேர்தல் ஆணையம்!
-
ஆப்பரேஷன் சிந்தூர் உலக வரலாற்றில் ஒரு மைல்கல்: பார்லியில் சிங்கமென கர்ஜித்த பிரதமர் மோடி உரை
-
ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; நிறுத்திய இந்திய நிறுவனங்கள்