ஆப்பரேஷன் சிந்தூர் உலக வரலாற்றில் ஒரு மைல்கல்: பார்லியில் சிங்கமென கர்ஜித்த பிரதமர் மோடி உரை

12

பார்லியில் பிரதமர் மோடி உரை (முதல் பகுதி)


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
1br

மகாதேவ்!



மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே, இந்த அமர்வின் தொடக்கத்திலே ஊடக நண்பர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது அனைத்து மதிப்பிற்குரிய பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைத்தேன்.



பார்லிமென்டின் இந்த அமர்வை இந்தியாவின் வெற்றிக் கொண்டாட்டத்தின் அமர்வு என்று அழைப்போம் என்று சொன்னேன். இது இந்தியாவின் புகழை பாடும் அமர்வாகும். நான் வெற்றிக் கொண்டாட்டம் (விஜயோத்சவம்) பற்றி பேசும் போது, இந்த வெற்றித் திருவிழா பயங்கரவாத தலைமையகங்களை தூள்தூளாக்குவது பற்றியது என்று சொல்ல விரும்புகிறேன்.

வெற்றித்திருவிழா




@quote@வெற்றித் திருவிழா என்று சொல்லும்போது, இது சிந்தூரின் சபதத்தை (சிந்தூர் கி சவுகந்த்) நிறைவேற்றுவது பற்றியது என்கிறேன். வெற்றித் திருவிழா என்னும்போது, இது இந்திய ராணுவத்தின் வீரம் மற்றும் வலிமையின் காவியத்தை கூறுகிறேன்.quote

வெற்றித் திருவிழா என்று சொல்லும்போது, 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமை, மனஉறுதி, அதன் இணையற்ற வெற்றியின் திருவிழா பற்றி பேசுகிறேன். இந்த வெற்றி உணர்வுடன் இந்தியாவின் நிலைப்பாட்டை உலகின் முன் வைக்க நான் இந்த அவையில் நிற்கிறேன்.



@quote@ இந்தியாவின் நிலைப்பாட்டை பீகார் கூட்டத்தில் இந்தி பேச்சை நிறுத்தி ஆங்கிலத்துக்கு மாறி சில வாக்கியங்கள் பேச என்ன காரணம் தெரியுமா? காணாதவர்களுக்கு இன்று ஒரு கண்ணாடியை தூக்கிக் காட்ட இங்கே நிற்கிறேன்.quote


மிருகத்தனத்தின் உச்சம்



140 கோடி இந்திய மக்களின் உணர்வுகளுடன் என் குரலை கலக்க நான் வந்துள்ளேன். 140 கோடி இந்தியர்களின் உணர்வுகளின் எதிரோலி, இந்த அவைவில் கேட்டது; அதோடு என் குரலையும் இணைக்கவே நான் இங்கே நிற்கிறேன்.



சிந்தூர் நடவடிக்கையின் போது நாட்டு மக்கள் எனக்கு அளித்த ஆதரவு, எனக்கு அளித்த ஆசீர்வாதங்கள் அபரிமிதமானது. அதற்காக நாட்டு மக்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன், மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மக்களை மனதார பாராட்டுகிறேன். ஏப்ரல் 22ம் தேதி அன்று பகல்ஹாமில் நடந்த கொடூர சம்பவம் எவராலும் மறக்க இயலாதது.




மண்டியிட...!




பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை துப்பாக்கி முனையில் மண்டியிட செய்து, அவர்களின் மதம் எது வென்று கேட்டு அடையாளம் தெரிந்து சுட்டுக் கொன்றது மிருகத் தனத்தின் உச்சம்.

இது இந்தியாவை வன்முறையின் தீயில் தள்ளுவதற்காக திட்டமிட்டமிட்டு எடுத்த முயற்சி. இது இந்தியாவில் கலவரங்களை தூண்டும் ஒரு சதி. இன்று, தமது ஒற்றுமையால் அந்த சதியை முறியடித்த இந்திய மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.




ஆங்கிலத்தில் பேசியது ஏன்?





ஏப்ரல் 22க்கு பிறகு ஒரு கூட்டத்தில் இந்தியில் பேசும்போது, வேண்டுமென்றே சில ஆங்கில வாக்கியங் களை உலகம் முழுமைக்கும் அந்த செய்தி போய் சேரவேண்டும் என்பதால் அவ்வாறு ஆங்கிலத்தில் பேசினேன்.



அதாவது இந்த படுபாதக செயலை இந்த மண்ணில் நிகழ்த்திய கொடூர பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கும் தப்பி ஓடினாலும், விடாமல் வேட்டையாடி அவர்கள் அத்தனை பேரையும் அழித்தொழித்து மண்ணோடு மண்ணாக்காமல் ஓயமாட்டேன் என்று சபதம் செய்தேன்.


கொலை செய்த பயங்கரவாதிகளை மட்டுமல்ல; பின்னால் இருந்து அவர்களது
மூளையாக செயல்பட்டவர்களும் தண்டனையில் இருந்து தப்பமுடியாது; அது சாதாரண தண்டனையாக இருக்காது, எவருடைய கற்பனைக்கும் எட்டாத தண்டனையாக இருக்கும் என்றும் மொத்த உலகத்துக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் பகிரங்கமாக அறிவித்தேன்.



சம்பவம் நடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று தான் வெளிநாட்டில் இருந்தேன். தகவல் கிடைத்ததும் நிகழ்ச்சி அனைத்தையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக நாட்டுக்கு திரும்பி வந்தேன்.
வந்த உடனே கூட்டத்தை ஒரு கூட்டத்தை கூட்டினேன். பயங்கரவாதத்துக்கு கடுமையான பதிலடி கொடுத்தாக வேண்டும் என்றும், இது நமது நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வு என்பதை அந்த கூட்டத்தில் பிரகடனம் செய்துவிட்டு சில தெளிவான அறிவுரைகளை வழங்கினேன்.




ராணுவத்துக்கு முழு அனுமதி




நமது ராணுவத்தின் திறன்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர்களின் தைரியம் மீது நம்பிக்கை உள்ளது. எனவே, ராணுவம் சுதந்திரமான நடவடிக்கை எடுக்க முழு அனுமதி வழங்கப்பட்டது. எப்போது, எங்கே, எப்படி, எந்த விதமான நடவடிக்கை எடுப்பது என்பதை அவர்களே முடிவு செய்ய அனுமதி வழங்கினோம். அந்த கூட்டத்தில் இதெல்லாம் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் மிகவும் தெளிவாக கூறப்பட்டது.


அங்கே பேசப்பட்ட சில விஷயங்கள் சில ஊடங்களிலும் செய்தியாக வந்திருக்கலாம். எப்போது, எங்கே, எப்படி, எந்த நமது ராணுவம் அந்த பொறுப்பை முழுவதுமாக ஏற்று, பயங்கர வாதிகளுக்கு தண்டனை வழங்கியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

நமது ராணுவம் வழங்கிய தண்டனை எப்படிப்பட்டது என்றால், அதை அனுபவித்த பின்னர் இன்று வரையிலும் அந்த பயங்கரவாத கும்பல்களின் எஜமானர்கள் தூக்கம் தொலைந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றியின் ஐந்து முகங்கள்




நமது ராணுவத்தின் வெற்றியை குறித்த இந்தியாவின் கருந்தோட்டத்தை இந்த சபையின் மூலமாக நாட்டு மக்களுக்கு முன் வைக்க விரும்புகிறேன். இந்த வெற்றியின் ஐந்து முகங்கள் குறித்து மக்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.


முதல் அம்சம் என்னவென்றால், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கும் என்பதை பாகிஸ்தான் ராணுவம் ஏற்கனவே உணர்ந்திருந்தது. அதனால் அவர்கள் தரப்பில் இருந்து அணு ஆயுத தாக்குதல் பற்றிய அறிக்கைகளும் பேட்டிகளும் வரத் தொடங்கின.

ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நமது ராணுவம் மே 6 இரவு மற்றும் மே 7 காலையில் நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானால் எதுவுமே செய்ய முடியவில்லை. வெறும் 22 நிமிடங்களில், இந்திய ராணுவம் ஏப்ரல் 22க்கு பழிக்குப்பழி வாங்கியது.



இரண்டாவது அம்சம் என்னவென்றால், இது பாகிஸ்தானுடன் நடந்த பெரிய போர் அல்ல! என்றாலும் இதற்கு முன்னர் போக நினைத்திராத, முயன்றிராத இடங்கள் வரையிலும் போய் பார்த்துவிடுவது என்ற தெளிவுடன் இந்தியா எடுத்த முதல் வியூகம் இது தான்.


திட்டமிட்டபடி, இதுவரை எட்டியும் பார்க்காத இடங்களுக்கு சென்றோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு மூலையிலும் இருந்த பயங்கரவாத முகாம்கள் தகர்த்து தரைமட்டமாகி புகை மண்டலமாக மாற்றப்பட்டன.


அங்கிருந்த பயங்கரவாத பதுங்கு குழிகள் அருகில் செல்ல யாரும் கற்பனைகூட செய்திருக்க முடியாது என்று கூறப்பட்ட இடங்கள் எதையும் நமது மற்றும் முரிட்கே ஆகியவை தகர்த்து தரையோடு தரையாக ஆக்கப்பட் டன. நமது ராணுவம் பயங்கரவாத முகாம்களை துல்லியமாக குறி வைத்து தாக்கி அழித்தன.


மூன்றாவது அம்சம் என்னவென்றால், பாகிஸ்தானின் அணுகுண்டு மிரட்டல் வெறும் பூச்சாண்டி என்பதை உலகத்துக்கு நாம் நிரூபித்து காட்டினோம். அணு ஆயுத மிரட்டல் இனி எடுபடாது என்பதையும். காட்டினோம். அணுஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது என்பதையும் உலக அரங்கில் சந்தேகத்துக்கு இடமின்றி இந்தியா நிரூபித்தது.


நான்காவது அம்சம், மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே, இந்தியா தனது சொந்த
தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி, பாகிஸ்தானின் நெஞ்சில் துல்லியமாக தாக்கி பெரும் வலியை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் விமானப்படை தளங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இன்றும் கூட அவர்களின் பல விமானப்படை தளங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளன.


தொழில்நுட்பம் சார்ந்த போர்களுக்கான காலம் மலர்ந்துவிட்டது. அந்த புதுவகை போர்த்திறமையிலும் இந்தியா முன்னணியில் நிற்பதை ஆப்பரேஷன் சிந்தூர் இந்த உலகத்துக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.


கடந்த 10 ஆண்டுகளில் நாம் செய்த முன்னேற்பாடுகளை செய்யாமல் விட்டிருந்தால், இந்த தொழில்நுட்ப போர் காலத்தில் நமக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை கணக்கிட்டு பார்த்தால் நமது சாதனை புரியும்.


ஐந்தாவது அம்சம் என்னவென்றால், 'ஆப்பரேஷன் சிந்தூர் நடந்த போது தான் ஆத்மநிர்பர் பாரத் என்கிற தற்சார்பு இந்தியாவின் வலிமையை உலகம் முதல் முறையாக பார்த்தது. மேட் இன் இந்தியா ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஆயுத பலவீனங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தன.

தேடி வந்து அடித்து தூக்குவோம்!



மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது ராணுவ பாதுகாப்பு பணிகளை கவனித்து கொண்டிருந்தவர், என்னை சந்திக்க வந்தார். நான்
முப்படைகளின் கூட்டு தளபதி என்கிற சிடிஎஸ் பதவி உருவாக்கத்தை அறிவித்ததற்காக அவர் மிக மிக மகிழ்ச்சி அடைத்தார்.



அவர் கணித்தது போலவே, ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நமது கடற்படை, தரைப்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளின் கூட்டு நடவடிக்கையும், அவற்றுக்கிடையிலான ஒருங்கிணைப்பும் பாகிஸ்தானை நடுநடுங்க வைத்தது. இதற்கு முன்பும் நமது நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தன. அப்போதெல்லாம், பயங்கரவாதிகளை பின்னால் இருந்து இயக்கும் சூத்ரதாரிகள் கவலைப்பட்டது இல்லை.




@quote@தங்களை எவராலும் தேடி கண்டுபிடிக்க முடியாது என்ற நம்பிக்கையில், அவர்கள் அடுத்த தாக்குதலுக்கான தயாரிப்புகளில் மும்முரமாக இருந்தனர். அந்த நிலை இப்போது மாறிவிட்டது. இப்போது, ஒரே ஒரு தாக்குதல் நடந்தாலும், அதன் சூத்ரதாரி அதற்கு பிறகு தூங்க முடியாது. quote

எங்கே ஓடி ஒளிந்தாலும் இந்தியா தேடி வந்து அடித்து தூக்கும் என்று அவர்களுக்கு இப்போது நன்றாக தெரியும். இதுதான் இத்தியாவின் புதிய நார்மல், மாறிவிட்ட மாமூல் நிலை, என்பது இப்போது ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் உறைக்கிறது. உலகத்துக்கும் புரிகிறது.


இந்தியாவின் சிவப்பு கோடுகள்



நமது நடவடிக்கையில் நோக்கம் என்ன, என்பதை உலகம் பார்த்தது. சிந்தூர் முதல் சிந்து நதி வரை பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் அதை செய்தவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பின்னால் நிற்கும் சூத்ரதாரிகளும் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தானுக்கு இப்போது புரிந்திருக்க வேண்டும்.


ஒரு குண்டு வெடிப்பை நிகழ்த்தி விட்டு, ஒரு நாசவேலையை செய்துவிட்டு ஹாயாக கைவீசி நடந்து போய்விடலாம், கடந்துபோய்விட லாம் என்கிற பழைய கதை இனி மேல் எடுபடாது. இது வேறுமாதிரி இந்தியா.

ஆப்பரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா மூன்று சிவப்பு கோடுகளை வரைந்திருக்கிறது.

* இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தால், நாங்கள் எங்கள் வழியில் எங்கள் விதிகளின்படி, நாங்கள் தேர்வு செய்யும் நேரத்தில் பதிலடி கொடுப்போம்.

* அணுகுண்டு மிரட்டலும் இனி எடுபடாது.

* பயங்கரவாதிகளுக்கு ஆதரவான அரசாங்கத்தையும், பயங்கரவாத கும்பல்களின் தலைவர்களையும் தாங்கள் வேறுபடுத்திப் பார்க்க மாட்டோம். இந்தியாவின் பார்வையில் இவர்கள் இருவரும் ஒன்று தான்.

எனது நாட்டின் வீரர்களுக்கு, அவர்களின் வீரத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது. ஏப்ரல் 22ம் தேதி தாக்குதலுக்குப் பிறகு, மூன்று நான்கு நாட்களில் அவர்கள் எகிறி குதித்து, '56 இன்ச் மார்பு எங்கே போனது? மோடி எங்கே தொலைந்து போனார்? மோடி தோற்றுவிட்டார் என்று பேச ஆரம்பித்தார்கள்.

அந்த தருணத்தை அவர்கள் நன்றாகவே ரசித்தார்கள். ''ஆஹா நாம் வெற்றி பெற்றுவிட்டோம்' என்று நினைத்தார்கள். நமது ராணுவம் சொன்னதையே நம்பாதவர்களை என்ன சொல்லி, யார் நம்ப வைப்பது என்பதுதான் சவால்.

பஹல்காமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட துயரத்தில் கூட அவர்கள் தங்கள் அரசியலை தேடினார்கள். தங்கள் சுயநல அரசியலுக்காக என்னை இலக்காக எடுத்து கொண்டார்கள்.அதல் எனக்கு வருத்தமில்லை. ஆனால் அவர்களின் அறிக்கை தமது ராணுவத்தின் மன உறுதியை சீர்குலைத்தது.

(ராகுல் குறுக்கிட்டு காட்டமாக ஏதோ சொல்லி ஆட்சேபிக்கிறார். அவரை நோக்கி பிரதமர் பேசுகிறார்) மதிப்பிற்குரிய எதிர்கட்சி தலை வர் அவர்களே, ஒரு நிமிடம், ஒரு நிமிடம். உங்கள் நீண்ட பேச்சை எல்லோரும் கவனமாக கேட்டார் கள். ஆனால் நீங்கள் மட்டும் மற்ற வர்கள் பேச்சில், அதுவும் உட்கார்ந்தபடியே குறுக்கீடு செய்வது உங்களுக்கு உங்கள் பதவிக்கு பொருத்தமாக இருக்குமா?

சபாநாயகர் அவர்களே, இவர்களுக்கு இந்தியாவின் பலத்தின் மீது நம்பிக்கை இல்லை, இந்திய ராணு வத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. அதனால்தான் தொடர்ந்து 'ஆப்பரேஷன் சிந்தூர்' குறித்து கேள்வி எழுப் புகிறார்கள். இப்படி செய்வதன் மூலம் ஊட கங்களில் தலைப்பு செய்திகளில் பெயர் வரலாம். ஆனால் நாட்டு மக்களின் இதயங்களில் இடம் பிடிக்க முடியாது.


மே 10 அன்று, 'ஆப்பரேஷன்சிந்தூர்' தாக்குதலை நிறுத்துவதாகஇந்தியா அறிவித்தது. அதைபற்றி இங்கே பலவிதமானவிஷயங்கள் பேசப்பட்டன. இது எல்லாமே பாகிஸ்தான் செய்யும் பிரசாரத்தில் கூறப்படும் அதே விஷயங்கள் தான். இந்திய ராணுவம் வெளிப்படையாக சொல்லி வந்த உண்மைகளை ஏற்பதற்கு மனமில்லாமல், இப்படி அப்பட்டமாக பாகிஸ்தானின் பொய்களை அவர்களுக்காக பரப்புவது சிலரது வேலையாக இருக்கிறது.



சில விஷயங்களை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். பாலக்கோடு விமானதாக்குதல் நடந்தபோதும், நாம் பதிலடி கொடுத்தோம். பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்களை அழிப்பது அன்று நமது இலக்காக இருந்தது, அதை செய்து காட்டினோம். அதே மாதிரி தான், 'ஆப்பரேஷன் சிந்தூர்' விஷயத்திலும் சரியான இலக்குகளை நாம் நிர்ணயம்செய்தோம்.


பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத்தின் மையப்புள்ளி எது என்பதை கண்டுபிடித்து அழிப்பது, பஹல்காம் பயங்கரவாதிகள் எந்த இடங்களில் உட்கார்ந்து சதி திட்டம் தீட்டினார்களோ, அந்த இடங்களையும், அதற்காக அவர்கள் பயிற்சி பெற்ற இடங்களையும், நிதி, தொழில்நுட்ப உதவி, ஆயுதங்களை பெற்ற இடங்களையும் தாக்கி அழிப்பது தான் நமது குறிக்கோள். அவைதான் நமது இலக்குகள்.

பாலக்கோடு தாக்குதலுக்கு பதிலடிகொடுத்ததை போலவே, இந்தமுறையும் அந்த இடங்களை எல்லாம் கண்டறிந்து, நமது ராணுவம் தனது இலக்குகளை 100சதவீதம் துல்லியமாக தாக்கி அழித்து வெற்றி கண்டது. அந்த நடவடிக்கை மொத்தமும் மே 6ம் தேதி இரவு மற்றும் மே 7ம் தேதி அதிகாலையில் நடந்து முடிந்தது. மே 7 காலையில், சர்வதேச செய்தியாளர் கூட்டத்தில் இந்திய ராணுவம் இந்த விவரங்களை தெரிவித்தது.



பயங்கரவாதிகளை, பயங்கரவாதத்தின் தலைவர்களை, பயங்கரவாத அமைப்புகளை, அவர்களின் தளங்களை அழிப்பதே நமது இலக்கு, நமது குறிக்கோள், நமது நோக்கம் என்பதை அதற்கு முந்தைய நாளே நமது ராணுவம் அனைத்து செய்தியாளர்கள் முன்னிலையிலும் தெளிவாக அறிவித்து இருந்தது.


அதன்படி ராணுவம் கச்சிதமாக வேலையை முடித்த காரனத்தால், மே 7ம் தேதி செய்தியாளர்கள் கூட்டத்தில் நமது ராணுவ அதிகாரிகள், “நாங்கள் எங்கள் வேலையை முடித்துவிட்டோம்”என்று அறிவித்தனர். அதாவது, என்ன செய்ய வேண்டும் என்று ஏற்கனவே விரிவாக பேசி தீர்மானித்து இருந்தோமோ, அந்த பணிகளை விரைவாகவே முடித்து விட்டோம்.


அந்த வெற்றிகரமான நடவடிக்கைக்கு பிறகு, நமது ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் என்ன சொன்னாரோ, அதை இங்கே நான் மீண்டும் சொல்கிறேன். 'ஆப்பரேஷன் சிந்தூர்' முடிந்த சில நிமிடங்களில், அந்த செய்தியை உலகத்துக்கு அறிவித்தோம். பாகிஸ்தானுக்கும் சேர்த்து தான் அந்த செய்தியை சொன்னோம்.


அதாவது, “இதுதான் எங்கள் இலக்கு, இதை நாங்கள் முடித்துவிட்டோம்” என்று செய்தியாளர்கள் சந்திப்பு மூலமாக பாகிஸ்தானுக்கும் சேதி அனுப்பினோம். நமது ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அதை தெரிவித்தது. பாகிஸ்தான் தலைவர்களுக்கும் நிலவரம் தெரியட்டும், அவர்களது மனதில் என்ன ஓடுகிறது என்று நமக்கும் தெரியட்டும் என்று நினைத்தோம்.


பாகிஸ்தானுக்கு கொஞ்சமாவது அறிவு இருந்திருந்தால், அதோடு அமைதியாகி நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள். பயங்கரவாதிகளுடன் பகிரங்கமாக துணைநிற்கும் தவறை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் வெட்கமில்லாமல் பயங்கரவாதிகளுடன் துணைநிற்க முடிவு செய்தனர். அப்படி ஒரு திருப்பம் வரக்கூடும் என்பதையும் முன்னரே நாம் கணித்து, அதற்கும் தயார் நிலையில் தான் இருந்தோம்.
நமது ராணுவம் தயாராக இருந்தது. அடிப்பதற்காக காத்திருந்தாலும், “எங்கள் இலக்கு பயங்கரவாதம் மட்டுமே, பாகிஸ்தான் ராணுவமோ அரசாங்கமோ அல்ல” என்று உலகத்துக்கு சொல்லிக் கொண்டிருந்தோம். பயங்கரவாதிகளுக்கு உதவுவது என்று முட்டாள் தனமாக ஒரு முடிவு எடுத்து, இந்தியா மீது தாக்குதல் நடத்த தீர்மானித்து களத்தில் இறங்க முயன்ற போது, இதற்கு மேலும் காத்திருக்க கூடாது என்று இந்தியராணுவம் சிலிர்த்து எழுந்தது.

மண்டியிட்டது பாகிஸ்தான்



காலாகாலத்துக்கும் பாகிஸ்தான் மறக்க முடியாத பதிலடியைகொடுத்தது இந்தியா. மே 9 ம்தேதி நள்ளிரவு மற்றும் மே10 ம்தேதிகாலையில், நமது ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்து சென்று, பாகிஸ்தான் ஒருபோதும் கற்பனை செய்திராத வகையில், கடுமையான தாக்குதலை நடத்தியது.

நாலா திசையிலும் நமது ஏவுகணைகளும் டிரோன்களும் பாய்ந்து பாய்ந்து கொடுத்த அடிதாங்காமல் மண்டியிட்டது பாகிஸ்தான். டெலிவிஷன்திரைகளில் உலகமே பார்த்தது. பாகிஸ்தான்மக்கள், "ஓ, நான் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தேன்," என்று ஒருவர் சொன்னார், மற்றொருவர், "நான் அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருந்தேன்"என்றார். “நாங்கள் எதையும் யோசிப்பதற்குள் இந்தியா தாக்குதல் நடத்தியது' என்றார் இன்னொருத்தர்.



இந்தியா இப்படி அதிரடியாக தாக்கும்; அதுவும் பல இடங்களில் ஒரேநேரத்தில் என்று பாகிஸ்தான் நினைக்கவே இல்லை. அதை அவர்கள் கற்பனை கூட செய்ததில்லை. அப்போது தான் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல், DGMO, டெலிபோனை எடுத்து நம்முடைய தளபதிக்கு கால்போட்டார்.


“அய்யோ, போதும்நிறுத்துங்கள். இந்தஅடியேபோதும். இதற்கு மேல் அடிதாங்கஎங்களுக்கு சக்தி இல்லை” என்று பாகிஸ்தான் தளபதி நமது தளபதியிடம் கெஞ்சினார்.
நம்மாள் சொன்னார், “நாங்கள் தான் முதல் நாளே சொன்னோமே. எங்கள் இலக்கு இதுதான் என்று. அதன் பிறகு, எங்கள் வேலை முடிந்தது என்பதையும் அறிவித்தோம். அதோடு நீங்கள் வாயை பொத்திக் கொண்டு போயிருந்தால் பிரச்னை வந்திருக்காது. மறுபடியும் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்து வாலாட்ட பார்த்தீர்கள். அதனால் தான் இந்த அடி” என்று.

இந்தியாவின் சாதனையை இதுவரை எவரும் சொல்லாத விதத்தில் விவரித்து கூறி உணர்ச்சி பொங்க அலசுகிறார் பிரதமர் மோடி.

அடித்தோம்; செய்து முடித்தோம்!



இன்று நான் மீண்டும் சொல்கிறேன். இது தான் இந்தியாவின் தெளிவான கொள்கை. இது நன்றாக சிந்தித்து, ஆழ்ந்து விவாதித்து வகுக்கப்பட்ட கொள்கை. ராணுவத்துடன் சேர்ந்து பேசி நிர்ணயித்த கொள்கை. அதாவது, நமது இலக்கு இன்னொரு நாடோ அதன் ராணுவமோ அதன் அரசாங்கமோ அதன் மக்களோ அல்ல.

பயங்கரவாதம், பயங்கரவாதிகள், அவர்களின் வசிப்பிடங்கள், பயிற்சி தளங்கள் மட்டுமே நமது இலக்கு. இதை முதல் நாளிலேயே செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கவும் செய்தோம்.
பாகிஸ்தானுடன் போர் தொடுப்பதோ, மேலும் மேலும் அதை பெரிதாக்குவதோ எங்கள் எண்ணம் கிடையாது என்று சொன்னோம். எந்த இலக்கை நாம் நிர்ணயம் செய்தோமோ, அதை அடைந்ததும் தாக்குதலை நிறுத்திவிட்டோம். சொல்லிஅடித்தோம்; செய்துமுடித்தோம். பிறகும்வாலாட்டமுயன்றார்கள்; வாலைநறுக்கிவிட்டோம். இவ்வளவுதான்கதை.



யார் யாரோ இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்ததால் ஆப்பரேஷன் சிந்தூரை நாம் நிறுத்தியதாக எதிக்கட்சியினர் புரளி கிளப்புகின்றனர். உலகின் எந்த நாட்டு தலைவரும் இது சம்பந்தமாக என்னிடம் பேசவும் இல்லை, இந்தியாவை நடவடிக்கையை நிறுத்தவும் சொல்லவில்லை . மே 9ம் தேதி இரவு, அமெரிக்க துணைஅதிபர் என்னிடம் பேச முயற்சி செய்தார். ஒரு மணி நேரம் முயற்சி செய்து கொண்டிருந்தார்.



ராணுவத்துடன் ஒரு கூட்டத்தில் இருந்ததால், அவருடையஅழைப்பைஏற்கவில்லை. கூட்டம் முடிந்த பின் அவரை அழைத்தேன். "மூன்று நான்கு முறை உங்கள் கால்வந்தது. என்னவிஷயம்?” என்றுகேட்டேன். “இந்தியா மீது மிகப்பெரிய தாக்குதலை பாகிஸ்தான் நடத்தப்போவதாக தகவல் கிடைத்திருக்கிறது”என்று அவர் என்னிடம் சொன்னார்.
“பாகிஸ்தானின் நோக்கம் அதுவாக இருந்தால், அதற்கு அவர்கள் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று நான் பதில் சொன்னேன். அமெரிக்காவிடம் இந்தியா சொன்ன பதில் இதுதான். புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு இந்த பதில் புரியாது. அதோடு இன்னொரு வாக்கியமும் அமெரிக்க துணை அதிபரிடம் சொன்னேன். “வீவில் ஆன்சர் புல்லெட்ஸ்வித் பாம்ஸ்” என்று சொன்னேன். துப்பாக்கி ரவைகளுக்கு வெடிகுண்டுகளால் பதில் சொல்வோம்” என்றேன்.



இது நடந்தது மே 9 ம் தேதி இரவு. அதே இரவில் தொடங்கி அதிகாலைக்குள் நமது ராணுவம் பாகிஸ்தானின் ராணுவ சக்தியை துவம்சம் செய்தது. இன்று வரை அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. இதுதான் எங்கள் மனஉறுதி. இன்று பாகிஸ்தானுக்கும் இது புரிந்திருக்கும். 'இன்றைய இந்தியா மிகவும் வலிமையானது. நாம் அடிக்க முயன்றால், ஒன்றுக்கு பத்தாக திரும்பபெற நேரிடும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை உருவானால், இன்னும் எத்தனையோ மடங்கு அதிகமாக இந்தியாவின் சீற்றத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும்' என்று நிச்சயமாக பாகிஸ்தான் புரிந்து கொண்டிருக்கும்.



ஆகையால், ஜனநாயகத்தின் கோயிலான இந்தசபையில் மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்: 'ஆப்பரேஷன் சிந்தூர்' முடியவில்லை, தொடர்கிறது. பாகிஸ்தான் அசட்டு துணிச்சலில் மறுபடியும் வம்புக்கு வந்தால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.

இன்றைய இந்தியா தன்னம்பிக்கை நிறைந்த நாடு. இன்றைய இந்தியா தற்சார்பு மந்திரத்தை ஏற்றுக்கொண்டு முழுபலத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது. நாடு தற்சார்பு அடைவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், காங்கிரஸ் கட்சிகுரல் கொடுக்க பிரச்னைகள் கிடைக்காமல், அதற்காக பாகிஸ்தானை சார்ந்திருக்க தொடங்கிவிட்டதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

(ராகுலும் கங்கிரஸ் உறுப்பினர்களும் ஆவேசமாக எழுந்து ஆட்சேபித்தனர். கூட்டல் குழப்பம் ஏற்பட்டது)

நான் நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன், உங்களுக்கு ஏன் பொறுமை இல்லை? 16 மணி நேரமாக நடந்து வரும் விவாதம். எதிர்க்கட்சி தலைவர் அவர்களே, தயவுசெய்துஉட்காருங்கள். எல்லாவற்றிற்கும் நான் பதிலளித்துவிட்டேன். நீங்கள்காதுகொடுத்து கேட்கவில்லை, கவனிக்கவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானிலிருந்து பிரச்னைகளை இறக்குமதிசெய்யவேண்டியிருக்கிறது.


இன்றைய போரில் தகவல்களும் செய்திகளும் மிக முக்கிய பங்காற்றுகின்றன. ராணுவத்தின் மன உறுதியை குலைப்பதற்காக, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கட்டுக் கதைகளை உருவாக்கி விளையாட்டு காட்டுகின்றனர். பேச்சால், எழுத்தால், காட்சிகளால் எதிரி நாட்டு மக்களிடம் நம்பிக்கையின்மையை உருவாக்குகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் பாகிஸ்தானின் அத்தகைய சூழ்ச்சிகளுக்கு செய்தி தொடர்பாளர்களாக மாறிவிட்டனர்.

நமது ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக நடத்தியது. உடனே காங்கிரஸ் கட்சியினர் ராணுவத்திடம் ஆதாரம் கேட்டார்கள். ஆனால் நாட்டின் மனநிலையையும், மக்களின் போக்கையும் பார்த்ததும் அவர்களின் குரல்கள் மாற தொடங்கின.

"சர்ஜிகல் ஸ்டிரைக் என்ன பெரிய விஷயம்? நாங்கள் கூட செய்திருக்கிறோம்"என்றார்கள். ஒருவர் மூன்று சர்ஜிகல் ஸ்டிரைக் செய்ததாக சொன்னார். இன்னொருவர் ஆறு சர்ஜிகல் ஸ்டிரைக் செய்ததாக சொன்னார். மூன்றாவது நபர் 15 என்று சொன்னார். தலைவர் எவ்வளவு பெரியவரோ, அந்த அளவுக்கு எண்ணிக்கை பெரிதாகி ஓடிக்கொண்டிருந்தது.

அதற்கு பிறகு, ராணுவம் பாலக்கோட்டில் விமான தாக்குதல் நடத்தியது. அது அட்டகாசமாக நடந்து முடிந்ததால், விமான தாக்குதல் பற்றி எதிர்க்கட்சிகளால் எதுவும் சொல்ல முடியவில்லை. நாங்களும் தான் செய்தோம் என்று சொல்லவில்லை. அதில் அவர்கள் புத்திசாலித்தனம் காட்டினார்கள். ஆனால் போட்டோ எங்கே, காட்டுங்கள் என்று கேட்க ஆரம்பித்தார்கள்.

"தாக்குதல்உண்மையில்நடந்ததா? போட்டோகாட்டுங்கள். குண்டுஎங்கேவிழுந்தது? என்ன உடைந்தது? எவ்வளவு தகர்ந்தது? கட்டடத்தில் எத்தனை பேர் இறந்தார்கள்?" என்று கேட்டுக் கொண்டேஇருந்தார்கள். என்னவேடிக்கைஎன்றால், பாகிஸ்தானும்அதையேகேட்டது.
நமதுவிமானப்படை பைலட் அபிநந்தன் பாகிஸ்தான் படைகளிடம் சிக்கியபோது, பாகிஸ்தானில் மகிழ்ச்சியான சூழல் நிலவியது என்றால் அது இயல்பு தான். இந்திய ராணுவத்தின் ஒரு பைலட் அவர்களின் கைகளில் சிக்கினால் மகிழாமல் என்ன செய்வார்கள்? ஆனால் இங்கேயும் சிலர் இருந்தனர்.

“வசமாக சிக்கினார் மோடி. அபிநந்தன் அங்கே இருக்கிறார், மோடி அவரை அழைத்து வரட்டும். என்ன செய்கிறார் என்று பார்ப்போம்"என்று காதோடு காது வைத்து பேசினார்கள். நாம் அபிநந்தனை மீட்டு அழைத்து வந்தோம். அவர்களின் வாய்கள் அடைபட்டு விட்டன. "அடடே, இந்தஆள்அதிர்ஷ்டசாலி. ஒருஆயுதம் நம் கையை விட்டு போய்விட்டதே" என்றுஅங்கலாய்த்தார்கள்.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, நமது எல்லை பாதுகாப்புபடை வீரர் ஒருவர் பாகிஸ்தான் பிடியில் சிக்கிய போது, 'ஆஹா, ஒரு பெரிய பிரச்னை கையில் கிடைத்தது. இப்போது மோடி சிக்கப் போகிறார்” என்று நினைத்தனர். சமூக ஊடகங்களில் பலகதைகளை பரப்பினர். 'பிஎஸ்எப் வீரருக்கு என்ன ஆகும்? அவரது குடும்பம் என்ன ஆகும்? அவர் திரும்புவாரா, மாட்டாரா? எப்போது திரும்புவார், எப்படி திரும்புவார்?' என்று எத்தனையோ கதைகள் பரப்பப்பட்டன.

அந்த பிஎஸ்எப் வீரர் கண்ணியத்தோடும் கவுரவத்தோடும் வீடு திரும்பினார். பயங்கரவாதிகள் அதை பார்த்துஅழுதார்கள். பயங்கரவாதிகளின் தலைவர்கள் அழுது புலம்பினார்கள். அவர்கள் அழுவதை பார்த்து இங்கேயும் சிலர் அழுது கொண்டிருந்தார்கள்.


@quote@எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு உண்மையான காரணத்தை நாட்டு மக்கள் அறிந்திருக்க வில்லை. quote
சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்தபோது, அவர்கள் ஒருகேம் ஆட முயற்சி செய்தார்கள், ஆனால் அது எடுபடவில்லை. விமானதாக்குதல் நடந்தபோது, மற்றொருகேம் ஆட முயற்சி செய்தார்கள், அதுவும் எடுபடவில்லை. இப்போது 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடந்த போது, அவர்கள் புதிய தந்திரத்தை கையில் எடுத்தனர்.

"ஏன் நிறுத்தி விட்டீர்கள்?"என்று கேட்கிறார்கள். முன்பெல்லாம் அவர்கள் நமது எதிரியை மனச்சோர்வில் இருந்து விடுவிக்கவிரும்பினர். இப்போது "ஏன் நிறுத்தி விட்டீர்கள்?" என்று கேட்கிறார்கள். ஓ, துணிச்சல் மிகுந்த வாய்ச்சொல்வீரர்களே, வாழ்க. என்னை எதிர்ப்பதற்கு உங்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் தேவை. அது தவிர வேலையே இல்லை. இதனால் தான் நான் மட்டுமல்ல, இந்த நாடே உங்களை பார்த்து சிரிக்கிறது.


ராணுவ எதிர்ப்பு, ராணுவத்தின் மீது எதிர்மறை எண்ணம். இது காங்கிரசின் பழைய நிலைப்பாடாகும். நாடு சமீபத்தில் கார்கில் விஜய் திவஸ் கொண்டாடியது. ஆனால் அவர்கள் ஆட்சி செய்த போதும் சரி, இப்போதும் சரி, கார்கில் வெற்றியை கொண்டாடவே இல்லை. அதை அவர்கள் அங்கீகரிக்கக்கூட முன்வரவில்லை. வரலாறு இதற்கு சாட்சி.



டோக்லாமில் நமது ராணுவத்தின் வீரம் வெளிப்பட்டபோது, காங்கிரஸ் தலைவர்கள் ரகசியமாக யாரிடமிருந்து குறிப்புகளை பெற்றார்கள் என்பது இப்போது உலகத்துக்கே தெரியும். பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கைகளையும், இங்கு நம்மை எதிர்ப்பவர்களின் அறிக்கைகளையும் எடுத்து ஒப்பிட்டு பாருங்கள். வரிக்கு வரி, கமா முற்றுப்புள்ளி வரை அப்படியே பொருந்தி இருக்கும். இதை என்ன வென்று சொல்வது?



காங்கிரஸ் எப்போது என்ன பேசினாலும், அது பாகிஸ்தானின் குரலை எதிரொலிப்பதாகவே இருக்கிறது. பாகிஸ்தான் மீது எந்த தவறும் கிடையாதுஎன்றுகாங்கிரஸ்நற்சான்றிதழ் கொடுத்தபோது, ஒட்டுமொத்தநாடும்அதிர்ந்துபோனது. மக்கள்திகைத்துநிற்கிறார்கள். நாட்டுக்கேஎதிரானஅவர்களின்இந்ததுணிச்சல்இன்றுவரைமாறவில்லை.
அதனால்தான், “பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் எங்கே?” என்று கேட்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவர். இதென்ன கூத்து? காங்கிரஸ் கேட்பதைத்தான் பாகிஸ்தானும் கேட்கிறது.


இன்று ஆதாரங்களுக்கு குறைவில்லாத போதும், எல்லாமே கண்களுக்கு தெளிவாக தெரியும் போதும், இவர்கள் இப்படி கேட்கிறார்கள் என்றால், ஆதாரம் இல்லாதிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? கற்பனை செய்யக்கூட என்னால் முடியவில்லை.


'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் ஒரு பகுதி குறித்து அதிகம் பேசப்படுகிறது. ஆனால் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் தருணங்களும், நமது ராணுவம் மற்றும் மக்களின் வலிமை குறித்த வெளிப்பாடுகளும் இதில் அடங்கி உள்ளன. அவற்றின் மீதும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

உதாரணமாக, இன்று நம்முடைய வான் பாதுகாப்பு அமைப்பு குறித்து உலக அளவில் பிரமிப்புடன் பேசப்படுகிறது. நமது வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் துண்டுகளாக்கி சிதறடித்ததை உலகமே பார்த்தது.


பொய்யை அம்பலமாக்கினேன்




இன்று ஒரு தகவலை சொல்ல விரும்புகிறேன். நாடேபெருமையில்மிதக்கும். சிலருக்கு என்ன ஆகுமோ எனக்கு தெரியாது. மே 9அன்று பாகிஸ்தான் சுமார் ஆயிரம் ஏவுகணைகள் மற்றும் ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் மூலம் இந்தியா மீது பெரிய தாக்குதலை நடத்த முயன்றது. அந்த ஏவுகணைகள் இந்தியாவின் எந்தப்பகுதியில் விழுந்திருந்தாலும், அங்கே பெரும் அழிவு ஏற்பட்டிருக்கும்.


ஆனால் இந்தியா ஆயிரம் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வானத்திலேயே எதிர்கொண்டு தகர்த்து தூள் தூளாக்கியது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இதைகேட்டு புளகாங்கிதம் அடைவார். ஆனால் காங்கிரஸ்காரர்கள் வேறு செய்திக்காக காத்திருக்கிறார்கள்.


“ஏதாவது தவறு நடக்காமலா போய்விடும்? எதிலாவது சிக்கி மோடி சாகத்தான் போகிறார்” என்று நம்பிக்கையோடு அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆதம்பூர் விமான தளம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக அந்தநாடு பொய் பிரசாரம் செய்தது. பலநாடுகளையும் செய்தி தளங்களையும் பயன்படுத்தி அந்த பொய்யை விற்க தலைகீழாக முயன்றது. மறுநாளே ஆதம்பூருக்கு சென்றேன். அங்கே எந்த சேதமும் இல்லை, தாக்குதலும் இல்லை என்பதை காட்டி அவர்களின் பொய்யை அம்பலமாக்கினேன். அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது, இந்த பொய் எடுபடாது என்று.



@block_P@

கண நேர பிழை; நுாற்றாண்டு தண்டனை

ஒரு கவிதை கேட்டிருக்கிறோம். எனக்கு அதைப்பற்றி அதிகம் தெரியாது. ஆனால் கேட்டிருக்கிறேன். லம்ஹோ நே கதா கி அவுர் சடியோன் நே சஜா பயி (கண நேர பிழையால் நுாறாண்டுகள் தண்டனை அனுபவிக்கிறோம்) சுதந்திரத்துக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுகளின் தண்டனையை நாடு இன்று வரை அனுபவித்து வருகிறது. இங்கு மீண்டும் மீண்டும் ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டது.

நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். அக்சாய் சின். அந்த முழுப்பகுதியும் தரிசு நிலம் என்று அறிவிக்கப்பட்டது. தரிசு என்று கூறி நாட்டின் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்தை நாம் இழக்க நேரிட்டது. வரலாற்றுத்தவறுகளும் தியாகங்களும் பற்றிய எனது சில வார்த்தைகள் சிலரை குத்துவது எனக்குத்தெரியும். அதற்காக சொல்லாமல் விட முடியுமா? காங்கிரஸ் தலைவர்கள் 1962 மற்றும் 1963க்கு இடையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கிஷன்கங்கா பகுதிகளை விட்டுக்கொடுக்க சம்மதித்தனர்.

அதுவும் சமாதானக்கோடு என்ற பெயரில் செய்யப்பட்டது. 1966ல் கச் பாலைவன உரிமை பிரச்னையில் இவர்களே மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டனர். இது தான் அவர்களின் தேசிய பாதுகாப்பு பார்வை. மீண்டும் ஒரு முறை அவர்கள் இந்தியாவின் 800 சதுர கிலோமீட்டர் பகுதியை பாகிஸ்தானுக்கு வழங்கினர். 1965 போரில் ஹாஜிபிர் கணவாயை நமது ராணுவம் மீண்டும் கைப்பற்றியது. ஆனால் காங்கிரஸ் அதை மீண்டும் திருப்பிக்கொடுத்தது. 1971ல் பாகிஸ்தானின் 93 ஆயிரம் வீரர்கள் நம்மிடம் கைதிகளாக இருந்தனர்.


பாகிஸ்தானின் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பகுதியை நமது ராணுவம் கைப்பற்றியிருந்தது. அந்த நேரத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திருப்பி கேட்டிருந்தால் பாகிஸ்தான் மறுத்திருக்க முடியாது. அந்த வாய்ப்பும் கைவிட்டுப்போனது. குறைந்தபட்சம் கர்தார்பூர் சாஹிப்பையாவது எடுத்திருக்கலாமே! அதையும் அவர்கள் செய்யவில்லை. 1974ல் இலங்கைக்கு கச்சத்தீவு பரிசாக அளிக்கப்பட்டது.

இன்றும் நமது மீனவ சகோதர சகோதரிகள் இதனால் கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து வருகிறது. தமிழ்நாடு மீனவர்கள் என்ன தவறு செய்தார்கள். ஏன் இந்த தண்டனை? நீங்கள் அவர்களின் உரிமையை பறித்து மற்றவர்களுக்கு பரிசளித்தீர்கள். தசாப்தங்களாக சியாச்சினில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற காங்கிரஸ் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக 2014ல் நாடு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இல்லை என்றால், இன்று சியாச்சினும் நம்மிடம் இருந்திருக்காது.block_P




பாக்., ரிமோட் கன்ட்ரோல் காங்.,




நமது சிறுகட்சி நண்பர்கள், அரசியலுக்கு புதியவர்கள், ஆட்சி செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்களிடமிருந்து சில விஷயங்கள் வருவது எனக்கு புரிகிறது. ஆனால்காங்கிரஸ்கட்சிஇந்தநாட்டில்நீண்டகாலமாகஆட்சிசெய்துள்ளது. அவர்களுக்கு ஆட்சி அமைப்புகள் பற்றி முழுமையாக தெரியும். நல்ல அனுபவம் உள்ளது. ஆனாலும் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக பதிலளித்த போதிலும் அதை ஏற்க மறுக்கிறார்கள்.


வெளியுறவு அமைச்சர் மீண்டும் மீண்டும் பதிலளித்தும், பேட்டிகள் கொடுத்தும், அறிக்கை விட்டும் காங்கிரஸ் தலைவர்கள் அவர் சொல்வதை ஏற்கமறுக்கிறார்கள். அவரைமட்டுமல்ல, உள்துறை அமைச்சர், ராணுவஅமைச்சர் என யாரையுமே அவர்கள் நம்பவில்லை.
இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களுக்கு நாட்டின் அமைப்புகள் மீதுநம்பிக்கை இல்லை என்றால், அவர்களுக்கு உண்மையில் என்ன தான் ஆகிவிட்டது என்ற கேள்வி எழுகிறது.


இப்போது காங்கிரஸின் நம்பிக்கைகள் பாகிஸ்தானின் ரிமோட்கன்ட்ரோல் மூலமாக உருவாக்கப்படுகிறது, மாற்றப்படுகிறது. எதிர்க்கட்சியின் நோக்கங்கள் மற்றும் நடவடிக்கைகள் கேள்விக்குறி ஆகின்றன.


ஆப்பரேஷன் மகாதேவ்




காங்கிரஸின் புத்தம் புதிய உறுப்பினர் ஒருவர்.. புது உறுப்பினர் என்பதால் அவரை மன்னிக்க வேண்டும். அவரை குற்றம் சொல்ல கூடாது. ஆனால் அவருக்கு பேச்சு எழுதி கொடுத்து, சபையில் பேசவைக்கும் தலைவர்களுக்கே துணிச்சல் இல்லாமல் தான், அவரை பேச வைக்கிறார்கள்.


அவர் சொல்கிறார் 'ஆப்பரேஷன்சிந்தூர்' ஒரு கேலிக்கூத்து, என்னுடைய புகழை காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட கண்காட்சி என்று! என்ன கொடுமை பார்த்தீர்களா? பயங்கரவாதிகள் கொலை செய்த 26 அப்பாவி மக்களின் நினைவுகள் மீது ஆசிட் ஊற்ரும் கொடுஞ்செயல் அல்லவா, இந்தபழி?

பஹல்காம் தாக்குதல் நடத்திய கொலைகாரர்கள் நேற்று நமது ராணுவத்தால் 'ஆப்பரேஷன் மகாதேவ்' நடவடிக்கையின் கீழ் அழிக்கப்பட்டனர். அதைக் கூட கேலி செய்து இங்கே கேட்கப்பட்ட கேள்வி எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது:

“ஆப்பரேஷன் மகாதேவ் ஏன் நேற்று மட்டுமே நடந்தது? இதுவரை என்ன செய்து கொண்டிருந்தது ராணுவம்?” என்றெல்லாம் கேட்கிறார்கள். எனக்கு புரியவில்லை. என்ன ஆயிற்று இவர்களுக்கு? “ஆடிமாதம் நல்லநாள் பார்த்து சுட்டு கொன்றார்களா?” என்று கேட்கின்றனர்.

இவர்களுக்கு என்ன ஆனது? இந்த அளவுக்கு விரக்தி மற்றும் ஏமாற்றம் ஏன் வந்தது? பலவாரங்களாக, “சிந்தூர் எல்லாம் சரி தான். பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு என்னஆனது?” என்று கேட்டவர்கள், அந்த ஆசாமிகளை ராணுவம் சுட்டுகொன்றதும், “இத்தனை நாளாக இல்லாமல் ஏன் நேற்று?” என்று கேட்கிறார்கள்.


நமது சாஸ்திரங்களில் ஒரு விஷயம் சொல்லப்பட்டுள்ளது. “சாஸ்த்ரரக்ஷதேராஷ்ட்ரே, சாஸ்த்ரசர்ச்சாபிரவர்த்ததே”.அதாவது, ஒருதேசம்ஆயுதங்களால்பாதுகாக்கப்படும்போதுதான், அங்கே அறிவு பூர்வமான விவாதங்கள் நடக்க முடியும். எல்லையில் படைகள் வலிமையாக இருந்தால் தான் ஜனநாயகம் செழிக்கும்.


கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ராணுவத்தை வலுப்படுத்தியதற்கு 'ஆப்பரேஷன் சிந்தூர்' ஒரு நேரடி சான்றாகும். இது தானாக நடக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது, படைகளை தற்சார்பு அடையச் செ ய்வது பற்றி சிந்திக்கக்கூட இல்லை. இன்றும் கூட தற்சார்பு அல்லது ஆத்மநிர்பர் என்ற வார்த்தை காங்கிரசால் கேலி செய்யப்படுகிறது. இது மகாத்மா காந்தியிடம் இருந்து வந்த வார்த்தை என்பது அவர்களுக்கு தெரியுமோ, தெரியதோ.

ஒவ்வொரு ராணுவ ஒப்பந்தத்திலும் எவ்வளவு சுருட்டலாம் என்று காங்கிரஸ் தனது வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தது. சிறிய ஆயுதங்களுக்காக கூட வெளிநாடுகளை சார்ந்திருப்பது அவர்களின் வழக்கம். குண்டு துளைக்காத ஆடை, இரவுப் பார்வை கேமரா இதெல்லாம் கூட நாமாக தயாரிக்கவில்லை, அவர்கள் ஆட்சியில்.


எப்படி இருந்த இந்தியா




அந்த ஊழல்களின் பட்டியல் நீளமானது. வெறும் ஜீப்பில் தொடங்கி, போபர்ஸ் பீரங்கி, ஹெலிகாப்டர் என அதில் ஏராளம் இருக்கிறது. நவீன ஆயுதங்களுக்காக பல தசாப்தங்களாக நமது ராணுவம் காத்திருக்க வேண்டியிருந்தது. சுதந்திரத்துக்கு முன்பே ஆயுத உற்பத்தியில் இந்தியாவுக்கு நல்ல பெயர் இருந்தது.


துப்பாக்கி, குண்டுகள் வருகைக்கு முன்னால் வாள் ஏந்தி சண்டையிட்ட காலத்தில் கூட, இந்தியாவின் வாள் சிறந்ததாக மதிக்கப்பட்டது. ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் மன்னர் காலத்திலேயே நாம் முன்னணியில் இருந்தோம். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு, நமது வலுவான ராணுவ தளவாட உற்பத்தி பரப்பு, திட்டமிட்டு அழிக்கப்பட்டது. பலவீனப்படுத்தப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்கு வழிகள் அடைக்கப்பட்டன.

அதே வழியில் சென்றிருந்தால், 21 ம் நூற்றாண்டில் 'ஆப்பரேஷன் சிந்தூர் ' குறித்து இந்தியாவால் சிந்தித்தே இருக்க முடியாது. அந்த நிலையில் அவர்கள் நாட்டை வைத்திருந்தார்கள். எதிரி மீது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் ஆயுதங்கள் எங்கே கிடைக்கும்? சாதனங்கள் எங்கே கிடைக்கும்? வெடிமருந்து எங்கே கிடைக்கும்? சரியான நேரத்தில் கிடைக்குமா இல்லை யா? இடையில் நிறுத்தாமல் தருவார்களா? என்று எப்போதும் பதற்றமாக இருக்கும்.

தற்சார்புள்ள நவீன நாடு



கடந்த பத்தாண்டுகளில், 'மே க் இன் இந்தியா' ஆயுதங்கள் ராணுவத்துக்கு கிடைத்தன. சிந்தூர் ஆப்பரேஷனில் அவை தீர்க்கமான பங்கு வகித்தன. பத்தாண்டுக்கு முன்பு, “எங்கள் நாடு சக்தி வாய்ந்த, தற்சார்புள்ள நவீன நாடாக மாற வேண்டும்” என்று இந்திய மக்கள் சபதம் எடுத்தனர். ஒவ்வொரு துறையிலும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன,.

சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக இவை நடந்தன . பாதுகாப்பு படை தலைவர் நியமனம் என்பது ஒரு புதிய யோசனை அல்ல. பரிசோதனையாக பல நாடுகள் செய்துள்ளன. ஆனால், முக்கிய முடிவுகள் இந்தியாவில் எடுக்கப்படவில்லை. நாங்கள் இதை பெரிய சீர்திருத்தமாக செய்தோம். முப்படைகளும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டன.

மிக உயர்ந்த சக்தி என்பது கூட்டுத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பு. இந்த நேரத்தில் கடற்படை ஆகட்டும், விமானப்படை ஆகட்டும், தரைப்படை ஆகட்டும், இந்த ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுத்தன்மை எங்கள் பலத்தை பல மடங்காக அதிகரித்துள்ளது என்றே சொல்கின்றனர்.


ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களில் நாங்கள் சீர்திருத்தங்களை செ ய்தபோது, ஆரம்பத்தில் அங்கு தீவை ப்பது, போராட்டங்கள் நடத்துவது, வேலை நிறுத்தம் செ ய்வது போன்ற சித்து விளையாட்டுகள் நடந்தன. இப்போதும் அவை நிற்கவில்லை . ஆனால் தேச நலனை முதன்மையாக கருதி, நமது ராணுவ துறையினர் சீர்திருத்தத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள், உற்பத்தித்திறன் மிக்கவர்களாகவும் மாறிவிட்டார்கள்.

அதுமட்டுமல்ல, நாங்கள் தனியார் துறைக்கும் ராணுவ துறையின் கதவுகளை திறந்துவிட்டோம். இன்று இந்தியாவின் தனியார் துறை முன்னேறி வருகிறது. பாதுகாப்பு துறையில் நமது 27-30 வயதுடைய இளைஞர்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் இளை ஞர்கள், பல இடங்களில் பெ ண்கள் கூட ஸ்டார்ட்அப்களுக்கு தலைமை தாங்குகிறார்கள். பாதுகாப்பு துறையில் நூற்றுக்கணக்கான ஸ்டார்ட்அப்கள் செயல்படுகின்றன.


நமது நாட்டில் நடக்கும் டிரோன் உற்பத்தியில் 30-35 வயதுள்ளவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆப்பரேஷன் சிந்தூரில் அவர்களும் பங்களிப்பு செய்துள்ளனர். அனைவருக்கும் உறுதி அளிக்கிறேன்: முன்னேறுங்கள். இனி இந்த நாடு நிற்காது. இது வெறும் முழக்கம் அல்ல
பாதுகாப்பு துறையில் 'மே க் இன் இந்தியா' என்பது வெறும் முழக்கம் அல்ல. அதற்காக பட்ஜெட் கொள்கையில் மாற்றங்களை செய்துள்ளோம். பத்தாண்டில், ராணுவ பட்ஜெ ட் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. உற்பத்தி 250 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி 30 மடங்கு உயர்ந்துள்ளது. சுமார் 100 நாடுகளுக்கு ராணுவ பொருட்கள் ஏற்றுமதி செய்கிறோம்.


வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் உள்ளன. 'ஆப்பரேஷன் சிந்தூர்' உலக பாதுகாப்பு சந்தையில் இந்தியாவின் கொடியை ஏற்றியுள்ளது. இந்திய ஆயுதங்களின் தேவை இன்று அதிகரித்து வருகிறது. இது இந்தியாவில் மற்ற தொழில்களுக்கும் வலிமை சே ர்க்கும். நமது இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும்.


நமது இளைஞர்கள் தாங்களே உருவாக்கிய பொருட்களை கொண்டு உலகில் தங்கள் வலிமையை வெளிப்படுத்த முடியும். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சிலருக்கு இன்றும் கஷ்டமாக இருக்கிறது. தங்கள் புதையல் கொள்ளை அடிக்கப்பட்டது போல புலம்புகிறார்கள். இது என்ன மாதிரி மனநிலை? நாடு இத்தகை ய மக்களை அடை யாளம் காண வேண்டும்.


புத்தர் நாடு; யுத்தம் வேண்டாம்



பாதுகாப்பு துறையில் இந்தியாவின் தற்சார்பு, இன்றைய ஆயுதப் போட்டி காலத்தில் உலக அமைதிக்கும் அவசியமானது. இந்தியா போரின் நண்பனல்ல, அகிம்சையை போதித்த புத்தரின் நாடு. செழிப்பையும் அமைதியை யும் நாம் விரும்புகிறோம். ஆனால் செ ழிப்புக்கும் அமைதிக்குமான பாதை வலிமையின் வழியாகவே செல்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது.
நமது பாரதம் சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாராஜா ரஞ்சித் சிங், ராஜேந்திரசோழன், மகாராணா பிரதாப், லச்சித் போர்புகன் மற்றும் மகாராஜா சுஹல்தேவ் ஆகியோரின் நாடு. வளர்ச்சிக்கும் அமைதிக்கும் தேவைப்படுகிற ராஜதந்திர திறனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.




@block_G@

காங்கிரஸ் செய்யும் இறக்குமதி

இன்றைய இந்தியா தன்னம்பிக்கை நிறைந்த நாடு. இன்றைய இந்தியா தற்சார்வு மந்திரத்தை ஏற்றுக்கொண்டு முழு பலத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது. நாடு தற்சார்பு அடைவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்க பிரச்னைகள் கிடைக்காமல் அதற்காக பாகிஸ்தானை சார்ந்திருக்க தொடங்கி விட்டதையும், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

(ராகுலும் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆவேசமாக எழுந்து ஆட்சேபித்தனர். கூச்சல் குழப்பம் ஏற்பட்டது) நான் நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு ஏன் பொறுமை இல்லை. 16 மணி நேரமாக நடந்து வரும் விவாதம். எதிர்க்கட்சி தலைவர் அவர்களே தயது செய்து உட்காருங்கள். எல்லாவற்றுக்கும் நான் பதிலளித்து விட்டேன். நீங்கள் காது கொடுத்து கேட்கவில்லை. கவனிக்கவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானில் இருந்து பிரச்னைகளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.block_G

பாதுகாப்பில் சமரசம்



காங்கிரசிடம் தேசிய பாதுகாப்பு குறித்த பார்வை ஒரு காலத்தில் இருந்தது, ஆனால் இன்று அதற்கு இடமே இல்லை. அது எப்போதும் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்துகொண்டது. “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஏன் மீட்கவில்லை?” என்று இன்று கேட்கிறார்கள். அதுவும் சரி தான். இந்த கேள்வியை என்னிடம்தான் கே ட்க முடியும், வே று யாரிடமும் கேட்க முடியாது.


ஆனால் இதை கேட்பவர்கள் முதலில் பதிலளிக்க வே ண்டும்: யாருடை ய அரசாங்கம் காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தானுக்கு வாய்ப்பளித்தது? பதில் தெளிவானது. நான் நேருஜியை பற்றி பேசும்போதெல்லாம், காங்கிரஸ் கலக்கமடைகிறது. ஏனென்று தெரியவில்லை.


@quote@பாதுகாப்புத்துறை கதவுகளை நாம் தனியாருக்கும் திறந்து விட்டதால் என்னென்ன மாற்றங்கள்! quote


இன்று காங்கிரஸ் கட்சியினர் எங்களுக்கு ராஜதந்திரம் பற்றி பாடம் நடத்துகிறார்கள். நான் அவர்களின் ராஜதந்திரத்தை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதனால் அவர்களுக்கும் சில விஷயங்கள் புரியும்.


மும்பையில் நடந்த 26/11 கொடூரமான தாக்குதலுக்கு பிறகும், காங்கிரசுக்கு பாகிஸ்தான் மீதான அன்பு குறையவில்லை. உலகையே உலுக்கிய அத்தனை பெரிய சம்பவம் நடந்த சில வாரங்களுக்குள், வெளிநாட்டு சக்திகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, காங்கிரஸ் அரசு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.


'முஷைரா' கவிதை வாசிப்பு



26/11 போன்ற படுமோசமான பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகும், காங்கிரஸ் அரசு ஒரு பாகிஸ்தான் தூதரக அதிகாரியை கூட இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவிடவில்லை. அதற்கான தைரியம் காங்கிரசுக்கு இல்லை.ஒரு விசாவை, ஒரே ஒரு அதிகாரியின் விசாவை கூட காங்கிரஸ் அரசு ரத்து செய்யவில்லை. ரத்து செய்ய முடியவில்லை.


பாகிஸ்தானின் முழு ஆதரவுடன் நடந்த பெரிய பெ ரிய தாக்குதல்கள் நம் நாட்டின் மீது தொடர்ந்து நடந்தன. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல், 'மிகவும் விரும்பப்படும் நாடு' என்ற அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு வழங்கியது. நாசவேலைகளை பாகிஸ்தான் நிறுத்தாமலே தொடர்ந்தாலும், அந்த அந்தஸ்தை காங்கிரஸ் அரசு வாபஸ் பெறவோ ரத்து செய்யவோ நினைக்கவே இல்லை.

ஒருபுறம் மும்பை தாக்குதலுக்கு இந்தியா நீதி கேட்டு கொண்டிருந்தது. மறுபுறம் காங்கிரஸ் அரசு பாகிஸ்தானுடன் வணிகம் செய்வதில் ஆர்வம் காட்டி கொண்டிருந்தது.
ஒரு புறம் பாகிஸ்தான் அங்கிருந்து ரத்த வெறி கொண்ட பயங்கரவாதிகளை நமது நாட்டுக்குள் அணி அணியாக அனுப்பிக் கொண்டிருந்தது. மறுபுறம் காங்கிரஸ் இங்கே அமைதி மற்றும் நம்பிக்கையை விதைப்போம் என்ற பெயரில் முஷைரா என்கிற கவிதை வாசிப்புகளை நடத்தி கொண்டிருந்தது.

ஆனால், பஹல்ஹாம் நடந்த உடனே நாங்கள் என்ன செய்தோம்? பயங்கரவாதத்துக்கும் அமைதிக்கும் வேறுபாடு தெரியாமல் குட்டையை குழப்பி கொண்டிருந்த காங்கிரஸ் அரசு அமைத்த ஒருவழி பாதையை உடனே மூடினோம். பாகிஸ்தானுக்கு வழங்கி இருந்த மிகவும் விரும்பப்படும் நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்தோம். விசா வழங்குவதை நிறுத்தினோம். அட்டாரி-வாகா எல்லையை மூடினோம்.

நேரு என்ன செய்தார்?



இந்தியாவின் நலன்களை அடகு வைப்பது காங்கிரஸ் கட்சியின் ரத்தத்தில் ஊறிய பழக்கம். அதற்கு மிகப்பெ ரிய உதாரணம் சிந்து நதி நீர் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை யார் செ ய்தார்கள்? நேரு செய்தார். யாரோடு செய்தார்? பாகிஸ்தானுடன் செய்தார். அதில் என்ன விசேஷம்? நிறைய இருக்கிறது. ஒவ்வொன்றாக எடுத்து காட்டுகிறேன், நீங்களே பாருங்கள்.


பிரதமர் மோடி உரை இரண்டாம் பகுதி பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement