பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்; சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

புதுடில்லி: பீஹார் வாக்காளர் இறுதிப்பட்டியல் இன்று வெளியாக உள்ள நிலையில், பார்லிமென்டில் இது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று லோக் சபா சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

பீஹார் வாக்காளர் பட்டியலில் சட்டவிரோத வாக்காளர்களை நீக்கும் விதமாக, சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தை பார்லிமென்ட்டில் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பார்லிமென்டுக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பீஹார் வாக்காளர் இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என்று லோக் சபா சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

பீஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement