ஊர்க்காவல் படையினர் பிரச்னைக்கு இதுதான் காரணம்: சொல்கிறார் சீமான்

சென்னை:திமுக அரசு ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கத் தவறியதே தற்போது ஊர்க்காவல் படையினர் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் முக்கிய காரணமாகும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2800 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருவது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்ட பிறகும் ஊர்க்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது
தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமும் இன்றுவரை வழங்கப்படவில்லை பணி நிரந்தரமும் செய்யப்படவில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், நாளொன்றுக்கு 150 ரூபாய் என வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை, 560 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஒப்புக்கொண்டது.
கேரளம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு 18000 ரூபாய் அளவுக்கு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உரிய ஊதியம் வழங்கப்படாததோடு, அவர்களுக்கென எவ்வித ஊக்கத்தொகையோ, ஓய்வூதியமோ இல்லாமல் பணிபுரிய வேண்டிய அவலச்சூழலே நிலவுகிறது.
ஆகவே, ஊர்க்காவல் படையினரின் பணியை வரன்முறைப்படுத்தி அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமெனவும், அவர்களது பணி நாட்களை மாத முழுமைக்கும் உயர்த்தி காலமுறை ஊதியம் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், காவலர்களுக்கு வழங்கப்படுவதுபோல் பயணப்படி, ஊக்கத்தொகை, விபத்து காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் ஊர்க்காவல் படையினருக்கும் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்
-
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு; தண்டனை விபரம் நாளை வெளியீடு
-
ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மஹாதேவ்: 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
-
பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்; சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்
-
செப்.,9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல்: அறிவித்தது தேர்தல் ஆணையம்!
-
ஆப்பரேஷன் சிந்தூர் உலக வரலாற்றில் ஒரு மைல்கல்: பார்லியில் சிங்கமென கர்ஜித்த பிரதமர் மோடி உரை
-
ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; நிறுத்திய இந்திய நிறுவனங்கள்