ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியலை தீர்மானிக்கிறது; சீமான் ஆவேசம்

சென்னை: "ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியலை தீர்மானிக்கிறது" என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் நெல்லை இளைஞர் ஆணவக் படுகொலை செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் சந்திப்பில், சீமான் கூறியதாவது: படித்த பிள்ளைகளிடம் இப்படி ஒரு உணர்வு இருக்கிறது. கல்வி வந்து அறிவை போதிக்க வில்லை. அறத்தை போதிக்கவில்லை, வாழ்க்கை நெறியை போதிக்கவில்லை. கல்வி வியாபாரம் ஆனதால், அந்த சிந்தனை அப்படியே இருக்கிறது, மறைக்கப்பட வில்லை.
படித்தவர்கள் எல்லாம் அதனை கடந்து வருவார்கள் என்று சொல்வார்கள். ஜாதி, மத உணர்ச்சி கடந்து, பேரன்பு கொண்டவனாக வருவான் என்பதற்கு புராணங்கள், தத்துவங்கள் எல்லாம் உருவாக்கப்படுகிறது. இதைவிட கொடுமை பள்ளி மாணவர்கள் ஜாதி வெறியுடன் வெட்டி கொண்டது, அதே நிலத்தில் நடந்தது தானே? பிஞ்சு நெஞ்சுக்குள் நஞ்சு விதை விதைக்கப்படுகிறது.
ஜாதியும், மதமும்...!
ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியல் செய்கிறது. இந்தியா முழுவதும் இதே நிலைமைதான்.
நாட்டின் உள்துறை அமைச்சர் மதுரையில் பேசும்போது ஹிந்து மக்களின் ஒற்றுமை என்று பேசுகிறார். இந்திய மக்களின் ஒற்றுமை என்று பேசி இருக்க வேண்டும். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட சமயம் மதம் சார்ந்தவர்கள் மீது வெறுப்பை கொட்டுவதை தங்களது அரசியல் என்று இருந்தால், அது எப்படி நாடு சரியாக இருக்கும். இங்கு மதமும் ஜாதிய உணர்ச்சியும் தான் அரசியலை தீர்மானிக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்.










மேலும்
-
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு; தண்டனை விபரம் நாளை வெளியீடு
-
ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மஹாதேவ்: 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
-
பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்; சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்
-
செப்.,9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல்: அறிவித்தது தேர்தல் ஆணையம்!
-
ஆப்பரேஷன் சிந்தூர் உலக வரலாற்றில் ஒரு மைல்கல்: பார்லியில் சிங்கமென கர்ஜித்த பிரதமர் மோடி உரை
-
ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; நிறுத்திய இந்திய நிறுவனங்கள்