ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்தது; முதல்வரை சந்திக்கும் நோக்கம் தெரியவில்லை என்கிறார் திருமா!

26

சென்னை: ''முதல்வர் ஸ்டாலினை ஓ.பி.எஸ்., எந்த நோக்கத்தில் சந்தித்தார் எனத் தெரியவில்லை. அவருக்கு நல்ல காலம் பிறந்து இருக்கிறது என்று நான் நம்புகிறேன்'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.



முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் பிரேமலதா சந்தித்து இருக்கின்றனர், திமுக கூட்டணிக்கு பல கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, திருமாவளவன் அளித்த பதில்:


இதை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். ஓபிஎஸ் என்ன நோக்கத்தில் முதல்வரை சந்தித்தார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார் என்பது அவருக்கு நல்ல காலம் பிறந்து இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.


நிருபர்: மற்ற கட்சிகள் திமுக கூட்டணிக்குள் வந்தால் நீங்கள் வரவேற்பீர்களா? தொகுதி ஒதுக்கீடு செய்வதில் ஏதும் போட்டி வராதா?



திருமா பதில்: அது குறித்து கூட்டணியின் தலைவர் தான் முடிவு எடுப்பார். இந்த கூட்டணி வலுப்பெறுவது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

Advertisement