வர்த்தக துளிகள்

வணிகத்தை விரிவுபடுத்தும் மாருதி இயக்குனர் குழு ஒப்புதல்
மாருதி சுசூகி நிறுவனம் கார் தயாரிப்பைத் தாண்டி தனது வணிகத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி, ட்ரோன்கள், ஆளில்லா விமானம், வாகன குத்தகை, போக்குவரத்து சேவைகள், மின்சார வாகன சார்ஜிங் நிலையம் மற்றும் பழைய கார் விற்பனையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இதற்கு நிறுவனத்தின் இயக்குனர் குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்குதாரர்கள் ஒப்புதலுக்கு இம்முடிவு சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செட்டில்மென்ட் செய்ய விரும்பும் இண்டஸ்இண்ட் முன்னாள் சி.இ.ஓ.,
இண்டஸ்இண்ட் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சுமந்த் கத்பாலியா, தன் மீதான இன்சைடர் டிரேடிங் வழக்கை முடிக்க 5.21 கோடி ரூபாய் செட்டில்மென்ட் மேற்கொள்ள செபியிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செபி, கடந்த மே மாதம் சுமந்த கத்பாலியா உட்பட இண்டஸ்இண்ட வங்கியின் ஐந்து மூத்த அதிகாரிகளுக்கு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்து 19.78 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. செபி விதிமுறைகளின்படி, ஒழுங்குமுறை விதிமீறல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறை ஒப்புக்கொள்ளவோ, நிராகரிக்கவோ இல்லாமல் செட்டில்மென்ட் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மேலும்
-
அரையிறுதியில் லக்சயா, தருண் * மக்காவ் பாட்மின்டனில் அபாரம்
-
இந்திய பெண்கள் அபாரம் * உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்
-
புதிய பயிற்சியாளர் ஜமில் * இந்திய கால்பந்து அணிக்கு...
-
முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா அபாரம்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து ஆல் அவுட்
-
மொபைல் போன் கூட கனமாக தெரிந்தது; முதல் முறையாக மனம் திறந்து பேசிய சுக்லா!
-
இந்தியர்களிடம் ரூ.23 ஆயிரம் கோடி திருடிய சைபர் கிரிமினல்கள்