இந்தியர்களிடம் ரூ.23 ஆயிரம் கோடி திருடிய சைபர் கிரிமினல்கள்

2


புதுடில்லி: கடந்த 2024ம் ஆண்டு டிஜிட்டல் மற்றும் சைபர் மோசடிகளில் ரூ.23 ஆயிரம் கோடியை இந்தியர்கள் இழந்துள்ளனர்.


இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையமானது, இந்த ஆண்டு இந்தியர்களிடம் ரூ.1.2 லட்சம் கோடி மோசடி நடக்கும் எனத் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2023ம் ஆண்டு டிஜிட்டல் கிரிமினல்கள் மற்றும் மோசடியாளர்கள் ரூ.7,465 கோடியை திருடினர். 2022ம் ஆண்டு ரூ.2,306 கோடி பணம் திருடப்பட்டுள்ளது. தற்போது 2023 ஐ காட்டிலும் 3 மடங்கு அதிகமாகவும், 2022ம் ஆண்டை காட்டிலும் 10 மடங்கு அதிகமாகவும் இந்தியர்கள் மோசடியாளர்களிடம் பணத்தை இழந்துள்ளனர்.


அதேபோல் சைபர் மோசடி நடந்ததாக

2023 ல் 15.6 லட்சம் புகார்களும்

2024 ல் 20 லட்சம் புகார்களும் வந்துள்ளன.

வங்கி மோசடி
வங்கி தொடர்பான மோசடிகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த 2024 - 25 நிதியாண்டை காட்டிலும் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த மோசடி 8 மடங்காக அதிகரித்துள்ளது. மோசடியால் இந்தியர்கள் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் ரூ.21,367 கோடியை இழந்துள்ளனர். முக்கியமாக தனியார் வங்கியில் தான் 60 சதவீத மோசடி நடந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement