அரையிறுதியில் லக்சயா, தருண் * மக்காவ் பாட்மின்டனில் அபாரம்

மக்காவ்: மக்காவ் சர்வதேச பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென் ('நம்பர்-17'), சீனாவின் ஜுவான் செனை ('நம்பர்-77') மோதினர். முதல் செட்டை 21-14 என வென்ற லக்சயா, அடுத்த செட்டை 18-21 என இழந்தார். அடுத்து நடந்த மூன்றாவது செட்டை 21-14 என கைப்பற்றினார். முடிவில் லக்சயா 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 2025ல் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில், தரவரிசையில் 47 வது இடத்திலுள்ள இந்தியாவின் தருண், 87வது இடத்திலுள்ள சீனாவின் ஜெ ஆன் ஹுவை சந்தித்தார். முதல் செட்டை 21-12 என கைப்பற்றினார் தருண். அடுத்த செட்டை 13-21 என இழந்தார். மூன்றாவது, கடைசி செட்டை தருண் 21-18 என வசப்படுத்தினார். முடிவில் தருண் 21-12, 13-21, 21-18 என போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 14-21, 21-13, 20-22 என மலேசியாவின் சூங், ஹைக்கல் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை; கடலுாரில் அதிகம்!
-
மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும்; முதல்வர் ஸ்டாலின்
-
பாகிஸ்தானில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: 15 நாட்களில் 3வது விபத்து
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
'நம் உள்ளத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும்'