மருத்துவ கல்லுாரியில் துணைவேந்தர் ஆய்வு

சிதம்பரம்:தம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் ஆய்வு செய்தார்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி நேற்று வருகை தந்தார்.
மருத்துவ கல்லுாரியில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பல்வேறு துறைகளை பார்வையிட்டார்.
மேலும் மருத்துவமனை யின் வார்டுகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து துணை வேந்தர் நாராயணசாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
கல்லுாரி முதல்வர் திருப்பதி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ், நிர்வாக துணை முதலவர் பாலாஜி சுவாமிநாதன், குழந்தைகள் நலத்துறை தலைவர் ராமநாதன், டாக்டர்கள் பாரி, ரவிச்சந்திரன், அசோக் பாஸ்கர், திருஞானம் உடனிருந்தனர்.
மேலும்
-
அரையிறுதியில் லக்சயா, தருண் * மக்காவ் பாட்மின்டனில் அபாரம்
-
இந்திய பெண்கள் அபாரம் * உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்
-
புதிய பயிற்சியாளர் ஜமில் * இந்திய கால்பந்து அணிக்கு...
-
முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா அபாரம்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து ஆல் அவுட்
-
மொபைல் போன் கூட கனமாக தெரிந்தது; முதல் முறையாக மனம் திறந்து பேசிய சுக்லா!
-
இந்தியர்களிடம் ரூ.23 ஆயிரம் கோடி திருடிய சைபர் கிரிமினல்கள்