விருதை நகராட்சி கூட்டம் கவுன்சிலர்கள் வாக்குவாதம்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி கூட்டம் நடந்தது.

நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். துணை சேர்மன் ராணி தண்டபாணி, நகராட்சி கமிஷனர் பானுமதி முன்னிலை வகித்தனர்.

நகரமைப்பு அலுவலர் செல்வம் வரவேற்றார். இந்த கூட்டத்தில் 33 வார்டுகளை சேர்ந்த தி.மு.க.,-அ.திமு.க., பா.ம.க.,-தே.மு.தி.க., சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் குடிநீர், சாலை, வடிகால் வாய்க்கால், ரேஷன் கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோரிக்கை வைத்தனர். அனைத்தும் பரீசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் சங்கவி முருகதாஸ் உறுதியளித்தார். துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

@block_B@ கூட்டத்தில் பரபரப்பு நகராட்சியில் 33 வார்டுகளின் தெருக்களில் உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும் என மன்ற பொருளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., என அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வரவேற்றனர். பின்னர், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., கட்சியினர் தங்கள் கட்சியில்தான் பட்டியலின மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது எனக்கூறி மூன்று கட்சியினரும் பட்டியலிட்டனர். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.block_B

Advertisement