பங்கு சந்தை நிலவரம் டிரம்ப் அறிவிப்பால் இறக்கம்

வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவைத் தொடர்ந்து, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின. இதனால், கடந்த இரண்டு நாட்கள் சந்தை குறியீடுகள் கண்ட உயர்வுக்கு தடை ஏற்பட்டது.


அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் காரணமாக ஐவுளி, ஐ.டி., மற்றும் வாகன தயாரிப்பு, மருந்து துறை பங்குகள் சரிவை கண்டன. இதனுடன் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை காரணமாக, பிற்பகல் வரை சரிவுடன் வர்த்தகமாகின. பிற்பகலில் சந்தை குறியீடுகள் சிறிய உயர்வு கண்டன. இருப்பினும், வர்த்தகம் முடிவடைய இருந்த சில மணி நேரங்களில், மாதாந்திர காலாவதியை ஒட்டி, அதிகளவில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டது. முடிவில், நிப்டி, சென்செக்ஸ் சரிவுடன் நிறைவடைந்தன.



உலக சந்தைகள்



@twitter@https://x.com/dinamalarweb/status/1951080374102311018twitter

புதனன்று அமெரிக்கச் சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி குறியீடு உயர்வுடனும்; ஹாங்காங்கின் ஹேங்சேங், தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் கலவையுடன் வர்த்தகமாகின.

சரிவுக்கு காரணங்கள்



* இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரி விதித்தது

* ஐவுளி, ஐ.டி., மற்றும் வாகன, மருந்து துறை பங்குகள் அதிகளவில் விற்றது

* தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேறி வருவது




அன்னிய முதலீடு



அன்னிய முதலீட்டாளர்கள் கோடி ரூபாய்க்கு பங்குகளை இருந்தனர்.

கச்சா எண்ணெய்



உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.74 சதவீதம் குறைந்து, 72.70 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு



அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசா அதிகரித்து, 87.58 ரூபாயாக இருந்தது.



நிப்டி: 24,768.35
மாற்றம்: 86.70 இறக்கம் சிவப்பு



சென்செக்ஸ்: 81,185.58

மாற்றம்: 296.28 இறக்கம் சிவப்பு


உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)

ஹிந்துஸ்தான் யுனிலீவர் 3.55

ஜியோ பைனான்ஸ் 2.72

ஜே.எஸ்.டபுள்யு., ஸ்டீல் 1.93



சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)

அதானி என்டர்பிரைசஸ் 4.06

டாடா ஸ்டீல் 2.52

சன் பார்மா 1.95

Advertisement