எண்கள் சொல்லும் செய்தி

16,327



பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் கடன் நிலுவை, கடந்த ஜூலை 10ம் தேதி நிலவரப்படி, 16,327 கோடி ரூபாய் என லோக்சபாவில் மத்திய அமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும், மற்றொரு நிறுவனமான எம்.டி.என்.எல்., நிறுவனத்தின் கடன் 34,576 கோடி ரூபாயுடன், வங்கிக்கு செலுத்த வேண்டிய 8,584 கோடி ரூபாய் கடன் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



4.50



அமெரிக்க கடன் வட்டி விகிதம் 4.25 -- 4.50 சதவீதமாக தொடரும் என அந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அறிவித்து உள்ளது. 1 சதவீதம் அளவுக்கு வட்டியை குறைக்குமாறு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி இருந்தார். ஆனால், அதை நிராகரித்து, பணவீக்கம் தொடர்பான கவலை நீடிப்பதால், ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என பெடரல் ரிசர்வ் வங்கி தலைவர்ஜெரோம் பாவெல் அறிவித்துள்ளார்.

Advertisement