இந்தியா வருகிறார் மெஸ்சி

கோல்கட்டா: அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 38. இவரது தலைமையிலான அணி, 2022ல் 'பிபா' உலக கோப்பை வென்றது. வரும் டிசம்பரில் இந்தியா வரவுள்ளார். கோல்கட்டா, ஆமதாபாத், மும்பை, டில்லி என நான்கு நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதுகுறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

* வரும் டிச. 12, இரவு 10.00 மணிக்கு கோல்கட்டா வருகிறார் மெஸ்சி. டிச. 13, காலை 9.00 மணிக்கு வி.ஐ.பி., சாலையில் உள்ள லேக் டவுன் ஸ்ரீபூமி என்ற இடத்தில் தனது 70 அடி சிலையை திறந்து வைக்கிறார். பின், மதியம் 12.00 மணி முதல் 1:30 மணி வரை ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 'கோட்' கோப்பைக்கான போட்டியில் கங்குலி, பயஸ், பாய்ச்சங் பூட்யா, பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டோருடன் விளையாடுகிறார்.


* டிச. 13 மாலை குஜராத்தின் ஆமதாபாத் செல்லும் மெஸ்சி, தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

* டிச. 14ல் மும்பை செல்லும் மெஸ்சி, மதியம் 3.45 மணிக்கு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின், மாலை 5.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கும் 'கோட்' கோப்பைக்கான போட்டியில் தோனி, கோலி உள்ளிட்டோருடன் இணைந்து விளையாடுகிறார்.

* டிச. 15ல் டில்லி செல்லும் மெஸ்சி, பிரதமர் மோடியை சந்திக்கிறார். பின், மதியம் 2.15 மணிக்கு அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 'கோட்' கோப்பைக்கான போட்டியில் விளையாடுகிறார். மெஸ்சியின் பயணத்திட்டத்தில் கேரளா இடம் பெறவில்லை.


@quote@

இரண்டாவது முறை



மெஸ்சி, 2வது முறையாக இந்தியா வரவுள்ளார். இதற்கு முன் 2011, ஆக. 31ல் கோல்கட்டா வந்த மெஸ்சி, சால்ட் லேக் மைதானத்தில் நடந்த வெனிசுலா அணிக்கு எதிரான கண்காட்சி போட்டியில் விளையாடினார். இதில் மெஸ்சி அணி 1-0 என வெற்றி பெற்றது.quote

Advertisement