உலக விளையாட்டு செய்திகள்

அர்ஜென்டினா அபாரம்
கியூட்டோ: ஈகுவடாரில் நடக்கும் பெண்களுக்கான 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 3வது இடத்துக்கான போட்டியில் அர்ஜென்டினா, உருகுவே அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 5-4 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 'திரில்' வெற்றி பெற்றது.


பிரான்ஸ் பிரமாதம்
போட்கோரிகா: மான்டினெக்ரோவில் நடக்கும் பெண்கள் (17 வயது) ஐரோப்பிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் பிரான்ஸ், மான்டினேக்ரோ அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 30-25 என்ற கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது.

ஸ்வியாடெக் கலக்கல்


மான்ட்ரியல்: கனடாவில் நடக்கும் நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ஜெர்மனியின் ஈவா லைஸ் மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.
பைனலில் அமெரிக்கா


மான்டிவீடியோ: உருகுவேயில் நடக்கும் பான் அமெரிக்கன் கோப்பை ஹாக்கி அரையிறுதியில் அமெரிக்க அணி, 3-1 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் சிலியை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் அர்ஜென்டினா 9-1 என, கனடாவை தோற்கடித்தது.


எக்ஸ்டிராஸ்

* துலீப் டிராபி கிரிக்கெட் தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷான், துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமனம். இந்த அணியில் முகமது ஷமி, ஆகாஷ் தீப் இடம் பெற்றுள்ளனர். மாற்று வீரராக வைபவ் சூர்யவன்ஷி தேர்வானார்.


* ஜாம்ஷெட்பூரில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் லடாக் எப்.சி., திரிபுவன் ஆர்மி அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.


* ஜெர்மனியில் நடக்கும் ஏ.டி.பி., சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் 2வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் 2-6, 6-4, 4-6 என ஜெர்மனியின் நீல்ஸ் மெக்டொனால்டிடம் தோல்வியடைந்தார்.


* தாய்லாந்தில் நடக்கும் ஆசிய குத்துச்சண்டை (19 வயது) சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்தியாவின் சாகர் (55 கி.கி.,), ஹர்ஷ் (60 கி.கி.,) வெற்றி பெற்றனர்.

Advertisement