மக்காச்சோள பரப்பை அதிகரிக்க மானியத்தில் விதைகள் விற்பனை
நாமக்கல், 'மக்காச்சோள பரப்பளவை அதிகரிக்கும் வகையில், வீரிய ஒட்டு ரக விதைகள் மற்றும் இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது' என, நாமக்கல் வேளாண் உதவி இயக்குனர் சித்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் வட்டாரத்தில், பிரதானமாக நிலக்கடலை, சோளம் சாகுபடி செய்யும் நிலையில், இதற்கு அடுத்தபடியாக மக்காச்சோளம் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இதன் தேவை அதிகரிப்பு காரணமாக, சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. தற்போது, எத்தனால் தயாரிக்க உதவும் மூலப்பொருளாக, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெட்ரோலில் எத்தனால் கலப்பு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மக்காச்சோளத்தின் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், மத்திய, மாநில அரசுகளின் வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 2024 முதல், இப்பயிர் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதற்கு ஏற்ப, வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் அதிக மகசூல் கிடைப்பதோடு, அதிக விலையும் கிடைப்பதால், விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
சிறப்பு வாய்ந்த மக்காச்சோளப்பயிர், இறவை மற்றும் மானாவாரி சாகுபடிக்கும் ஏற்றதாக உள்ளதால், சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள் மற்றும் இடுபொருட்கள் அடங்கிய, 6,000 ரூபாய் மதிப்புள்ள தொகுப்பு, மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், தங்கள் பகுதியிலுள்ள உதவி வேளாண் அலுவலர்களை அணுகி முன் பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகம்
-
காசாவில் துயரம்; உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாலஸ்தீனர்கள் 48 பேர் பலி
-
பௌர்ணமியின் மகத்துவம் என்ன?
-
கைத்தட்டல் அவருக்கு சொந்தம் வாங்கித்தருவது நம் வேலை: மோடிக்கு மொழிபெயர்த்தது பற்றி சுதர்சன்
-
உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: டிரம்பின் வரி மிரட்டலுக்கு மறைமுக பதிலடி
-
தமிழகத்தில் பரவலான மழை; புதுக்கோட்டையில் அதிகம்!