உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: டிரம்பின் வரி மிரட்டலுக்கு மறைமுக பதிலடி

வாரணாசி: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்துள்ள, 'அட்ராசிட்டி'க்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ''நாட்டு மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 'சுதேசி' என்ற உணர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் உள்ள தன் சொந்த லோக்சபா தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார்.
தேசிய இயக்கம் அங்கு, 2,183 கோடி ரூபாய் மதிப்பிலான 52 வளர்ச்சித் திட்டங்களை அவர் துவக்கி வைத்தார். இதில், சாலை உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும்.
தொடர்ந்து, வாரணாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:உலகப் பொருளாதாரம் உறுதியற்ற, நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கிறது.
இது போன்ற சமயங்களில், அனைத்து நாடுகளும் சொந்த நலன்களில் மட்டுமே கவனம் செலுத்தும். இந்தியாவும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான பாதையில் உள்ளது.
இதனால், சொந்த பொருளாதார முன்னுரிமைகளில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.இதில், அரசை போலவே நாட்டு மக்களுக்கும் பொறுப்புள்ளது. உள்ளூர் பொருட்களை நாம் ஆதரிக்க வேண்டும். அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இது ஒரு தேசிய இயக்கமாக மாற வேண்டும். இதை நான் மட்டும் சொல்லக் கூடாது; நாட்டு மக்கள் அனைவரும் சொல்ல வேண்டும்.
நம் நாடு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற வேண்டுமென்றால், கட்சி வேறுபாடுகளை மறந்து, அரசியல் தலைவர்கள் நாட்டின் நலனுக்காக ஒன்று சேர்ந்து, மக்களிடையே சுதேசி என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். எந்த பொருள் வாங்கினாலும், அதில் இந்தியரின் உழைப்பு இருக்கிறதா என, சிந்திக்க வேண்டும். 'உள்ளூர் பொருட்களுக்கான குரல்' என்ற மந்திரத்தை நாம் ஏற்க வேண்டும்.
உறுதிமொழி உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் நிலையில், நம் கடைகள் மற்றும் சந்தைகளில், சுதேசி பொருட்களை மட்டுமே விற்பனை செய்வோம் என்ற உறுதிமொழியை அனைத்து கடைக்காரர்களும், வியாபாரிகளும் எடுக்க வேண்டும். உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பதே நாட்டிற்கு செய்யும் உண்மையான சேவை. கூட்டு முயற்சியால் மட்டுமே, 'வளர்ந்த இந்தியா' என்ற கனவை நாம் நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.








மேலும்
-
கிராமப்புற ஏரிகளில் நடக்கும் கனிமவள கொள்ளை உயிர்பலி அபாயத்தில் காஞ்சிபுரம் விவசாயிகள்
-
'கமகம' ஸ்வீட்ஸ் டீ ஸ்டால் திறப்பு விழா
-
நாளை (ஆக. 5) மின்தடை (காலை 9:00 -மாலை 5:00 மணி )
-
'குறைந்த பாடல்கள் எழுதினாலும் நிறைந்த புகழ் பெற்றவர் மாயவநாதன்'
-
கைக்கெட்டும் தூரத்தில் மின்சாதனங்கள் * அச்சத்தில் கிராம மக்கள்
-
சூர்யா இசை பள்ளியின் 4ம் ஆண்டு விழா