சுற்றுலா பயணி வழுக்கி விழுந்து உயிரிழப்பு
சேந்தமங்கலம், திருச்சி, ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 48; பெயின்டர். இவரும், இவரது நண்பர்கள், 10 பேரும் சேர்ந்து, கடந்த, 25ல் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர்.
அவர்கள், கொல்லிமலையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, அங்குள்ள அறப்பளீஸ்வரர் கோவில் பின்புறம் ஓடும் சிற்றருவிக்கு சென்றுள்ளனர்.
அங்கு எதிர்பாராத விதமாக சீனிவாசன் வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்தார்.அவரை மீட்ட நண்பர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார். வாழவந்தி நாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகம்
-
காசாவில் துயரம்; உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாலஸ்தீனர்கள் 48 பேர் பலி
-
பௌர்ணமியின் மகத்துவம் என்ன?
-
கைத்தட்டல் அவருக்கு சொந்தம் வாங்கித்தருவது நம் வேலை: மோடிக்கு மொழிபெயர்த்தது பற்றி சுதர்சன்
-
உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: டிரம்பின் வரி மிரட்டலுக்கு மறைமுக பதிலடி
-
தமிழகத்தில் பரவலான மழை; புதுக்கோட்டையில் அதிகம்!
Advertisement
Advertisement