மக்களை அச்சுறுத்தும் 'பிளக்ஸ் பேனர்' கண்டுகொள்ளாத டவுன் பஞ்., அதிகாரிகள்
ப.வேலுார், ப.வேலுார், பொத்தனுார் மற்றும் பாண்டமங்கலம் டவுன் பஞ்., பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் பழைய பைபாஸ் சாலை, சிவா தியேட்டர் கார்னர், நான்கு ரோடு, சுல்தான்பேட்டையில் முக்கோண பூங்கா, மோகனுார் சாலை, ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொத்தனுார் டவுன் பஞ்., அலுவலகம் அருகே சாலையை ஆக்கிரமித்து அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து விபத்து ஏற்பட வழிவகுக்கிறது.
மேலும், சிவா தியேட்டர் கார்னரில் டாஸ்மாக் கடை உள்ளதால் இரவில் மது வாங்கிக்கொண்டு பிளக்ஸ் பேனர் மறைவில் அமர்ந்து சரக்கு அடிக்க ஏற்ற இடமாக உள்ளது. மற்றும் இவ்விடத்தில் இருசக்கர வாகனங்கள் எதிர்புறம் வருவது தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அரசியல் நிகழ்ச்சி, திருமணம், கடை திறப்பு விழா முடிந்தும் அப்புறப்படுத்தாமல் பல நாட்களாக அப்படியே விட்டுள்ளனர்.
தற்போது, காற்று பலமாக வீசுவதால் அடிக்கடி பிளக்ஸ் பேனர்கள் சாலையில் விழுந்த மக்களை அச்சுறுத்துகிறது. விபரீதம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் அதன்பின் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். எனவே, போலீசார், டவுன் பஞ்., நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர் இணைந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகம்
-
காசாவில் துயரம்; உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாலஸ்தீனர்கள் 48 பேர் பலி
-
பௌர்ணமியின் மகத்துவம் என்ன?
-
கைத்தட்டல் அவருக்கு சொந்தம் வாங்கித்தருவது நம் வேலை: மோடிக்கு மொழிபெயர்த்தது பற்றி சுதர்சன்
-
உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: டிரம்பின் வரி மிரட்டலுக்கு மறைமுக பதிலடி
-
தமிழகத்தில் பரவலான மழை; புதுக்கோட்டையில் அதிகம்!